புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2014


தீர்மானமெடுக்கும் அரசாங்கத்தின் உரிமையை பயங்கரவாதத்திற்கு விட்டுக்கொடுக்க முடியாது

ஜனாதிபதி; மஹிந்த ராஜபக்' பாக். ஜனாதிபதியிடம் தெரிவி;ப்பு
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் தர்க்க ரீதியானதல்ல; சர்வதேச அரங்கில் எப்போதும் ஒத்துழைப்போம் - பாக். ஜனாதிபதி

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாகவும் இலங்கைக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுகளும் தர்க்கரீதியானதல்ல எனவும் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்பின்போதே பாகிஸ்தான் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனாவில் நடைபெறும் சீ. ஐ. சீ. ஏ. சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனுக்குமிடையில் சீனாவின் செங்காய் நகரில் இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே பாகிஸ்தான் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது பாகிஸ்தான் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்: பாகிஸ்தான் எப்போதும் உங்களுடன் நாம் பயங்கரவாதத்தின் வேதனைகளை அனுபவித்தோம் இப்போதும் அந்த வேதனையை அனுபவிக்கின்றோம் இறைவனின் சித்தப்படி நாம் இதிலிருந்து மீளுவோம்.
சர்வதேச அரங்குகளில் பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும். ஏனெனில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டும் தர்க்க ரீதியானதல்ல என்பதை பாகிஸ்தான் உணர்ந்துள்ளது எனவும் பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையிலும் யுத்தக் காலங்களிலும் அதற்குப் பின்னரும் இலங்கைக்கு ஆதரவு வழங்கியமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார். யுத்தம் முடிவுற்ற பின்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் விளக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் போராளிகள் 14,000 பேரை மீள சமூகமயப்படுத்தியுள்ளதாகவும் யுத்தம் நிறைவுற்று மூன்று மாத காலத்திற்குள் 595 சிறுவர் படையினரை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளதையும் தெளிவுபடுத்தினார்.
இதன்போது வாழ்த்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் இலங்கை பாரிய வெற்றியை ஈட்டிக்கொண்டுள்ளதாகவும் அது நாட்டு மக்களினதும் அரசாங்கத்தினதும் நிலையான பதிவாக அமையும் எனவும் தெரிவித்தார். நீங்கள் எத்தகைய கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தாலும் அது வெற்றிகரமான கொள்கை என்பது தெளிவு எனவும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பில் பாகிஸ்தான் வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையுடனான நல்லுறவு மற்றும் பாகிஸ்தான் மக்களின் உணர்வு தொடர்பிலும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கை அரசாங்கமும் மக்களும் எமக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளனர். பாகிஸ்தான் சில நாடுகளுடன் மட்டுமே உணர்வுபூர்வமான தொடர்புகளைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார். இரண்டு நாடுகளுக்குமிடை யிலான கிரிக்கெட் சுற்றுலாவை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர். இதனையடுத்து இவ்வருடத்தின் நடுப்பகுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் விளையாட வுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாம் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் நிர்வாகத்திடம் உள்ள உரிமையை பயங்கரவாதிகள் தம் வசப்படுத்த நாம் இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத் தொடர்புகள் பற்றியும் அவை மேலும் பலப்படுத்தபட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.
இச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி செனரத், சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் ரஞ்சித் உயல்கொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்

ad

ad