புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014





""ஹலோ தலைவரே...  இந்தியாவின் புதிய பிரதமரா, வேறெந்த கட்சியின் ஆதரவும் இல் லாமல் பதவியேற்கப் போகிறார் மோடி. எம்.பி. தேர்தல் முடிவுகள் இப்படி புரட்டிப் போட்டுடுச்சே….  தமிழ்நாட்டில் இப்படியொரு ரிசல்ட் வரும்னு யாராவது எதிர்பார்த் தாங்களா?''

""ஜெயலலிதாகூட 30 சீட்டுக்கு குறையாம  ஜெயிப்போம்னு எதிர் பார்த்திருக்கிறார். ரிசல்ட் வர ஆரம் பிச்சி 37 சீட்டுகள் அ.தி.மு.கவுக்குன்னு கன்ஃபார்ம் ஆனதும் அவரே எதிர் பார்க்காத சந்தோஷம் கிடைச்சிருக்குது. உட னடியா போயஸ்கார்ட னில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கப் பட்டதாமே.''… 

""இந்திய அளவில் பா.ஜ.க, காங்கிரசுக்கு அடுத்தபடியா அதிக சீட்டுகளை ஜெயித்த கட்சியா அ.தி.மு.க முன்னேறி யதும் போயஸ்கார்டனில் மீடியாக்களை சந்திச்ச ஜெ., இந்த வெற்றிக்காக தமிழக வாக்காளர்களுக்கும், வெற்றிக்கு உழைச்ச அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் நன்றி சொன்னதோடு, அ.தி.மு.க அரசின் திட்டங்களுக்கு மக்கள் கொடுத்திருக்கிற வெற்றி இதுன்னு சொன்னார். மத்தியில் யாருக்கு ஆதரவுங்கிற சூழ்நிலை இப்போது ஏற்படலைன்னு சொன்னதோடு, மோடியின் வெற்றிக்கு வாழ்த்தும் சொன்னார் ஜெ. நல்ல வெற்றி கிடைத்த சந்தோஷம் இருந்தாலும், அந்த வெற்றி முழுப்பயனைத் தரலையேங்கிற கவலையும் அ.தி.மு.க தலைமைகிட்டே இருக்குது.'' 

""கடந்த இரண்டு தேர்தல்கள் போலவே இந்த முறையும் மத்திய அரசை நிர்ணயிப்பதில் தமிழகத்தோட பங்கு முக்கியமானதா இருக்கும்னு எதிர்பார்க்கப்பட்டது. அந்தக் கனவு கலைந்துபோயிடுச்சேன்னு அ.தி.மு.க தலைமை கவலைப்படுதா?''

""இந்தியாவின் பிரதமர் ஜெ.ன்னுதான் அ.தி.மு.க முதலில் பிரச்சாரத்தை ஆரம் பித்தது. அப்புறம் மத்தியில்  பா.ஜ.க அரசை சப்போர்ட் பண்ணி துணைப்பிரதமர் லெவலுக்கு வரலாம்ங்கிற கணக்கில்தான் கம்யூ னிஸ்ட்டுகளையும்கூட கழற்றிவிட்டுட்டு 40 தொகுதி களிலும் அ.தி.மு.க.வைத் தனித்து நிற்கவைத்தார் ஜெ. அந்த வியூகத்தை வெளிப்படுத்தாமல், தேர்தல் முடிவுகள் வந்தபிறகு தன்னோட முடிவைச் சொல்வதா கொடநாட்டிலிருந்து திரும்புன அன் னைக்கு மீடியாக்கள்கிட்டே சொன்னார். ஆனா, பா.ஜ.க அரசு அமைக்க அ.தி.மு.க ஆதரவு தரும்ங்கிற விஷயத்தை முன்னாள் எம்.பி.யும் ஐ.ஏ.எஸ்.  அதிகாரியுமான மலைச்சாமி வெளிப்படுத்த, அவரைக் கட்சியிலிருந்து கட்டம் கட்டிட்டார் ஜெ. தேர்தல் முடிவுகளில் இந்தியாவில் மூன்றாவது அதிக  சீட் பிடித்த கட்சி அ.தி.மு.கங்கிற நிலைமை உருவாகியும், மத்திய அரசை நிர்ணயிக்கக்கூடிய சக்தியா வர முடியலையேங்கிற வருத்தம் ஜெ.வுக்கு இருக்குது.''

""37 சீட்டுகளின் வெற்றி, சந்தோஷத்தைக் கொடுத்தாலும் அது முழுமையான சந்தோஷமா இல்லைன்னு சொல்ல வர்றியா?''

""ஆமாங்க தலைவரே.. .. இத்தனை சீட்  கைக்கு வந்தும் டெல்லியில் பவர் பாலிடிக்ஸ் பண்ணக்கூடிய வாய்ப்பில் லாதபடி, பா.ஜ.க தனிப்பெரும்பான் மைக்கான சீட்டுகளைப் பிடிச்சிடிச் சேங்கிறதுதான் ஜெ.வோட  மனநிலை. சட்டத்துறை போன்ற பவர்ஃபுல் துறைகளை வாங்கி தன் மீதான வழக்குகளை சட்டுபுட்டுன்னு முடிச்சிட லாம்னு நினைச்ச ஜெ.வின் திட்டம் இப்ப ஒர்க் அவுட் ஆகலை.  அதனால்தான் தன்னை சந்தித்து வாழ்த்துச் சொன்னவர்களிடம் மகிழ்ச்சிதான் ஆனாலும் மகிழ்ச்சி இல்லை என்றா ராம் ஆங்கிலத்தில். அதே நேரத்தில், மந் திரிகளெல்லாம் ஆயிரம்கோடிக்கு மேலே செலவு செஞ்சோம். இப்ப, பெரிய வெற்றி கிடைத்து விட்டதால தங்களோட பதவிக்கு ஆபத்தில்லைன்னு சொல்றாங்க.  வெற்றிச் செய்தியால் அ.தி.மு.க.வின் புதிய எம்.பிக்கள் மகிழ்ச்சியடைஞ் சாலும், என்னப்பா.. வெறும் எம்.பி.தானா? மத்திய மந்திரி யாகலாம்னு எதிர்பார்த்திருந்தோமே.. மற்ற மாநிலங்களில் வீசிய மோடி அலை நம் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கிடிச்சேன்னு தங்கள் ஆதரவாளர்கள்கிட்டே வருத்தப்பட்டிருக்காங்க. அ.தி.மு.க தரப்பில் முழு சந்தோஷமில்லை. தி.மு.க.வுக்கு ஒரு சீட்டுகூட கிடைக்கலைங்கிறதில் அ.தி.மு.கவின ருக்கு தனிப்பட்ட திருப்தி.''

ad

ad