புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014


என் மகனுக்கு கட்சி பதவி வேண்டாம்;குடும்பத்தை அரசியலுக்கு கொண்டு வரமாட்டேன்  :வைகோ

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள்
கூட்டம் சென்னை ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்தது.


கூட்டத்தில் ம.தி.மு.க. தோல்விக்கான காரணம், கட்சியின் எதிர்காலதிட்டம், பா.ஜனதாவுடன் தொடர்ந்து நல்ல அணுகுமுறையை கடைப்பிடிப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது வைகோ,  ’’வெற்றி தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. அ.தி.மு.க.வும், மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. தி.மு.க.வும் தோற்று இருக்கிறது. வரும் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்.
பா.ஜனதா கூட்டணியில் நாம் தொடர்ந்து நீடிக்கிறோம். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ம.தி.மு.க அங்கம் வகிப்பதை பா.ஜனதா தலைவர்கள் நம்மை மரியாதையுடன் நடத்துகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் நமக்கு ஏற்பட்ட தோல்வி அவர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜபக்சே வருகையை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்தி நமது எதிர்ப்பை தெரிவித்தோம். ராஜபக்சே பங்கேற்றதால் மோடி பதவி ஏற்பு விழாவையும் புறக்கணித்தோம். ஈழத்தமிழர்களுக்கான நமது செயல்பாடு தொடரும். மோடி தலைமையிலான மத்திய அரசு மூலம் தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வரவேண்டும். தமிழக நலனுக்காக மத்திய அரசை பயன்படுத்தும் வகையில் நாம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். சிறுசிறு பிரச்சினைக்களுக்காக மத்திய அரசை எதிர்க்க கூடாது.
2016–ல் ம.தி.மு.க. ஆட்சி அமைக்கும். இதற்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் தோற்று விட்டதால் நான் வேறு மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்–சபை எம்.பி. ஆகி பாராளுமன்றம் செல்வேன் என்று கூறுகிறார்கள். அதை நான் விரும்பவில்லை.
தமிழக மக்களுக்காக அரசியலில் ஈடுபட்டேன். அவர்களுடைய கோரிக்கைக்காக போராடி வருகிறேன். எனவே, வேறு மாநிலத்தில் இருந்து மேல்–சபை எம்.பி.யாகி அந்த மாநிலத்துக்காக என்னால் பேச முடியாது’’ என்று பேசினார்.
நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வைகோவின் மகன் துரை வையாபுரி விருதுநகர் தொகு தியில் தீவிர பிரசாரம் செய்தார். எனவே, அவருக்கு கட்சி பதவி வழங்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பிரநிதிதிகள் சிலர் வற்புறுத்தினார்கள்.
இதற்கு பதில் அளித்த வைகோ, ‘‘கட்சியில் துரை வையாபுரிக்கு எந்த பதவியும் வழங்க தேவை இல்லை. அவர் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இல்லை. நான் போட்டியிட்டதால் என்றார்.

ad

ad