புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2014


தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ராஜபக்ச வருகையை காரணம் காட்டி பிரதமர் பதவி ஏற்பு விழாவை பகிஸ்கரித்தார் . மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த5 மாநில முதலமைச்சர்கள்!

இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற முற்றத்தில் மாலை 6 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தெற்காசிய கூட்டமைப்பு உறுப்பு நாடுகளின் (சார்க்) தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று சார்க் நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இது தவிர வெளிநாட்டு தூதர்கள், அனைத்து மாநில கவர்னர்கள், முதல்– மந்திரிகள், அனைத்து கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் என 4 ஆயிரம் பேர் அழைக்கப் பட்டு உள்ளனர்.  ஆனால் மோடி பதவி ஏற்பு விழாவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய 5 மாநில முதலமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள்.
மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இலங்கை ராஜபக்சே அழைக்கப்பட்டதற்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.  ராஜபக்சேவை அழைத்த செயல் ‘‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே அதனை தவிர்த்திருக்க வேண்டும்’’ என்று அவர் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.
இதன் காரணமாக மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்வில்லை. தமிழக அரசு சார்பிலும் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. கேரள மாநில முதல்வர் உம் மன்சாண்டியும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வில்லை. ‘‘முன் கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் பதவி ஏற்பு விழாவுக்கு வர இயலாது என்று மோடியிடம் உம்மன் சாண்டி ஏற்கனவே தெரிவித்து விட்டார் என்று உம்மன்சாண்டியின் அலுவலக அதிகாரிகள் கூறினார்கள்.
இதே காரணங்களுக்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொளள்வில்லை.
ஒடிசா முதல்வர் ந வீன் பட்நாயக்கும் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் ஒடிசா நிதி மந்திரி பிரதீப் அம்த பங்கேற்கிறார்.  மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் மோடி பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.

ad

ad