புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014


ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணிகள் மாறலாம் - இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரம் மாற்றம் ஏற்படலாம் என்பதால், சிலர் பேதங்களை மறந்து வேறு கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய அரசியல் நிலைமைகளை நோக்கும் போது, பல அரசியல் சக்திகள் அடுத்த வருடத்தில் ஆரம்பத்தில் நடத்தப்பட உள்ளதாக நம்பப்படும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து செயற்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகள் தற்போது பல விடயங்கள் பற்றி பேசி வருகின்றன. இவ்வாறான நிலையில், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் நாட்டின் அரசியல் சக்திகள் ஒரு கூட்டணிக்கோ அல்லது தனியாக அணித்திரளவோ கூடும்.
ஜனாதிபதித் தேர்தல் என்பது அதிகார மாற்றத்திற்கான சந்தர்ப்பம். இதனால் சிலர் தமது தற்போதைய கொள்கைகளை புறந்தள்ளி வைத்து விட்டு, தேர்தலில் ஏற்படும் மாற்றத்தை எதிர்ப்பார்த்து செயற்பட வாய்ப்புள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே அரசியல் நிலைமைகளில் மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் விடயத்தில் எமக்கு தெரியவது ஆளும் கட்சி மாத்திரமே.
சாதாரணமாக நோக்கும் போது ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகளை ஏற்பட்டுள்ளதை காணமுடிகிறது.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறுமாயின் அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பதை நாம் அறிவோம்.
எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தெளிவாக நிலையில்லை. பலர் பொது வேட்பாளர் குறித்தே பேசி வருகின்றனர்.
பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.
எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.
எனினும் அந்த கட்சியில் உள்ள பலர் அரசாங்கத்திற்கு எதிரான சக்திகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கருதுகின்றனர்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியினால் இதற்கு தனியாக தலைமையேற்க முடியாத நிலைமையே காணப்படுகிறது எனவும் ராஜா கொலுரே குறிப்பிட்டுள்ளார்.

ad

ad