புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014


ரயிலில் இருந்து தள்ளிவிட்டதால் பெண் பயணி உயிரிழப்பு: டிக்கெட் பரிசோதகரை சரமாரியாக தாக்கிய பயணிகள்
மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். 



ஜலகோன் என்ற பகுதியில் ரயில் நிலையத்தில் 38 வயதான உஷ்வாலா பாண்டே என்ற பெண் பயணி, தனது 10 வயது மகனுடன் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயி-ல் ஏறியுள்ளார். சாதாரண வகுப்பு பயண சீட்டி வைத்திருந்த அவர், குளிர்சாதனப் பெட்டியில் ஏறியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சம்பத் என்ற டிக்கெட் பரிசோதகர், பெண் பயணியை தள்ளிவிட்டுள்ளார். இதனால் ரயிலுக்கும், நடைமேடக்கும் இடையே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து ரயிலின் சமையல் அறை பெட்டியில் சம்பத் பதுங்கி கொண்டார். அவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். அந்த ரயிலில் உள்ள பயணிகள் கூறுகையில், சம்பத் மது அருந்தியிருந்தாக தெரிவித்தனர். மேலும் போலீசார் பிடியில் இருந்த சம்பத்தை, பயணிகள் சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் பெண் பயணியின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் சம்பத்தை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad