புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014




""ஹலோ தலைவரே... தமிழ்நாட்டில் தேர் தல் ரிசல்ட் ஏற்படுத் துற பதட்டத்தைவிட கட்சித் தலைமைகளுக்கு கோர்ட்டும் வழக்கும் ஏற் படுத்துற பதட்டம்தான் அதிகமா இருக்குது.''

""இந்த வாரம்… கோர்ட் வா..ரம்னு சொல்ற மாதிரி ஜல்லிக்கட்டுத் தீர்ப்பு, முல்லைப்பெரியாறு அணைத் தீர்ப்பு அதோடு, கூடன்குளம் அணு உலைக்கு எதிரா பூவுலகின் நண்பர்கள் அமைப்புத் தாக்கல் செய்த மனுமீதான தீர்ப்புன்னு ஒரே தீர்ப்புமயம் தான். அதுவும், அணுஉலைக்கு எதிரான மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செஞ்சிடிச்சி. ஏற்கனவே அமைத்த குழு பரிந்துரைத்த 15 நெறிமுறைகளை அணுஉலை பராமரிப்புக்குப் பின்பற்றணும்னும், புதிய குழு அமைக்கத் தேவையில்லைன்னும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்குதே..''

""ஆமாங்க தலைவரே.. ஆனா இந்தத் தீர்ப்பெல்லாம் கட்சித்தலைமைகளைப் பதட்டமடைய வைக்கலை. அவங்க சம்பந்தப்பட்ட வழக்குகள்தான் பதட்டத்தை உண்டாக்கியிருக்குது. பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ. சார்பில் ஆஜராகும் வக்கீல் குமார், இந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரி லெக்சஸ் ப்ராப்பர்ட்டி கம்பெனி தாக்கல் செய்திருக்கிற மனு மீதான தீர்ப்பு வரும் வரைக்கும், மூல வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்னு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கொடுத்திருக்கும் தீர்ப்பை முன்வைத்து வாதாடி னார். இதற்கு அரசு வக்கீல் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமா மெட்ராஸ் ஹை கோர்ட் உத்தரவிட முடி யாதுன்னும், கர்நாடக ஹைகோர்ட்தான் உத்தர விடவேண்டும்னும் சொன்னார்.'' 

""இருதரப்பு வாதத் தையும் கேட்ட, ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா என்ன உத்தரவிட்டார்?''

""சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமா அரசு வக்கீல் மே 9-ந் தேதியும் 15-ந் தேதியும் வழக்கின் சாராம் சத்தை எடுத்துரைக்கணும் னும், அதே 15-ந் தேதி பேராசிரியர் அன்பழகன் தரப்பு எழுத்துப்பூர்வமா வாதத்தை சமர்ப்பிக்க ணும்னும், 19-ந்தேதியிலிருந்து குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் தரப்பு தங்களோட வாதத் தை எடுத்து வைக்க ணும்னும் நீதிபதி மைக் கேல் டி குன்ஹா உத்தர விட்டாரு. இது ஒரு பக்கம்னா, சொத்துக் குவிப்பு வழக்கில் சம்பந்தப் பட்டுள்ள கம்பெனிகள் சார்பா சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை யில், ஸ்பெஷல் கோர்ட்டில் ட்ரையலே நடக்கலைங்கிற மாதிரி வாதத்தைக் கொண்டுபோனதோடு, ஸ்பெஷல் கோர்ட் டின் விசாரணைக்கு தடை கொடுக்க ணும்னும் கேட்டிருந்தாங்க. வழக்கமா இந்த கேஸில் கர்நாடக அரசு தரப்பில் யாரும் ஆஜராவதில்லை. ஆனா,  வியாழக் கிழமை அடிஷனல் சொலிசிட்டர் சித்தார்த்ங்கிறவர் ஆஜராகி, ஸ்பெஷல் கோர்ட்டில் காலையும் மாலையும் ட்ரை யல் போய்க்கிட்டிருக்குதுன்னும், இறுதிக் கட்ட விசாரணை நடப்பதால ஸ்டே கொடுப்பது சரியாக இருக்காதுன்னும் எடுத்து சொன்னாரு.''

""சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னது?''

""பெஞ்ச்சிலிருந்த நீதிபதிகள், ஜெ. வழக்கில் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் உள்நோக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டதால செம டென்ஷனாயிட்டாங்க. விசாரணையை டிலே செய்வதற்காக இப்படி பெட்டிஷன் போட்டுக்கிட்டிருக்கீங்களா? உங்க சுயரூபம் நல்லாத் தெரியுது. உங்க மேட்டரைப் பற்றி மட்டும் பேசுங்க. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஏன் நீங்க ஸ்டே கேட்குறீங்கன்னு சொல்லி, கம்பெனிகள் சம்பந்தப்பட்ட மனு மீதான விசாரணையை பெஞ்ச் நீதிபதிகள் தவான், சலமேஸ்வரர், இக்பால் மூவரும் ஜூலை 2-ந் தேதிக்கு ஒத்தி வச்சிட்டாங்க. ஸ்டே கிடைக்கலைங்கிற தகவல் கொடநாட்டுக்குப் பாஸ் ஆனப்ப அவர் ரொம்ப அப்செட். தேர்தல் ரிசல்ட் நமக்கு சாதகமா வந்து, நாம நினைக்கிற மாதிரியான ஆட்சி மத்தியில் அமைஞ்சாதான் இந்த கேஸில் நாம நினைக்கிற மாதிரி நடக்கும்னு அப்செட் குரலில் கமெண்ட் வந்ததாம்.'' 

""எலெக்ஷன் ரிசல்ட் எப்படி இருந்தாலும் 2ஜி கேஸில் அமலாக்கப்பிரிவு போட்டிருக்கிற புது சார்ஜ் ஷீட்டினால மே 26-ந் தேதி டெல்லி ஸ்பெஷல் கோர்ட்டில் ஆ.ராசா, கனிமொழி இவங்களோடு தயாளு அம்மாவும் ஆஜராகணும்ல?''

""அந்த டென்ஷனில்தான் தி.மு.க தலைமை இருக்குதுங்க தலைவரே.. .. தயாளு அம்மாளுக்கு உடல்நிலை சரியில் லைங்கிறதை ஏற்கனவே 2ஜி கேஸில் சி.பி.ஐ. அவரை சாட்சியமா சேர்த்த வழக்கிலேயே கோர்ட் நியமிச்ச  டாக்டர்கள் டீம் வந்து பரிசோதனை செய்து உறுதிப்படுத்தி யிருக்குது. தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கே தயாளுஅம்மா ரொம்ப சிரமப்பட்டாரு. அவருக்கு ஞாபகசக்தியும் சரியா இல்லை. இதையெல்லாம் கோர்ட்டில் எடுத்துச் சொல்லி, அதற்குத் தகுந்த மாதிரி ஆர்டர் வாங்கலாம்னு தி.மு.க வக்கீல்கள் டீம் கலைஞர்கிட்டே சொல்லியிருக்குது.''

""இதையெல்லாம் 2ஜி வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓ.பி.ஷைனி எப்படி எடுத்துக்குவாராம்?''

""அதுதான் கலைஞரோட கவலை. நீதிபதியின் அணுகுமுறையை யாரும் முன்கூட்டி யோசிக்க முடியாது. தயாளு அம்மாள் தரப்பில் வைக்கப்படும் வாதங் களை ஏத்துக்கிட்டு வேறு தேதிக்கு மாற்றி வைப்பாரா? அல்லது சம்மன் அனுப்பிய தேதியில் ஆஜராக லைன்னு கைது வாரண்ட் போடு வாரா? ஒருவேளை, மே 26-ந் தேதி ஆஜராகுபவர் களை அரெஸ்ட் செய்ய உத்தரவிடு வாரா? என்றெல்லாம் ஏகப்பட்ட யோசனைகள். அரெஸ்ட்டுக்கான வாய்ப்பு குறைவுன்னு சட்ட வல்லுநர்கள் சொல்றாங்க. ஆனாலும், என்ன முடிவுங்கிறது நீதிபதி ஷைனி கையி லேதான் இருக்குது.''

""வியாழக்கிழமையன்னைக்கு 2ஜி சம்பந்தமான சி.பி.ஐ. போட்ட கேஸில் கனிமொழி, கலைஞர் டி.வி. சரத் ஆஜராகி    1600 கேள்விகளுக்கு வாக்குமூலம்  கொடுத்திருக் காங்க. உங்க பதில்களை பென்ட்ரைவில் போட்டுக் கொடுத்திடுங்கன்னு நீதிபதி சொல்லியிருக்காருப்பா..  டெல்லி சி.பி.ஐ. கோர்ட் மூலம் கலைஞருக்கும் பெங்களூரு சிறப்பு கோர்ட் மூலம் ஜெயலலிதாவுக்கும் கத்தி போல் வழக்கு மிரட்டுவதால் இரண்டு தலைவர்களுமே பதட்டத்தில்  இருக்காங்க. இருந்தாலும், தமிழகத்தில் தங்கி தமிழின் பெருமையை எடுத்துச் சொன்ன ஐரோப்பிய அறிஞர்  கால்டுவெல்லின் 200-வது பிறந்தநாளை இரண்டு தரப்புமே கொண்டாடியிருக்குதே!''

""தலைவரே.. சமஸ்கிருதத்தின் துணையில்லாமல் தனித்து நிற்கக்கூடிய செம்மொழி நம் தமிழ்னு தன்னுடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூல் மூலமா உலகத் திற்கு எடுத்துச் சொன்னவர் கால்டுவெல். அவர் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் பேராயரா இருந்தவர். கால்டு வெல்லின் பெருமைகளை எடுத்துச்சொல்லி அவரோட 200-வது பிறந்தநாளை நினைவூட்டி முதலில் அறிக்கை வெளியிட்டவர் கலைஞர்தான். அதனால, திருநெல்வேலி சி.எஸ்.ஐ. பேராயரா இப்ப இருக்கிற கிறிஸ்து தாஸ், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தின் இனிகோ இருதயராஜ் மூலமா கலைஞருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கடிதம் அனுப்பினார். இந்தத் தகவல் லீக் ஆனதும்தான், அரசுத் தரப்பில் கால்டு வெல் 200ஆவது பிறந்த நாள்விழா கொண்டாடப்படும்னு ஜெ. அறிவித்தார். மே 7-ந் தேதி கால்டுவெல்லின் 200-வது பிறந்தநாளன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினாங்க. அதுபோல தி.மு.க சார்பில் கலைஞர், பேராசிரியர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தினாங்க.''

""போட்டிக்குப் போட்டின்னாலும் இது ஆரோக்கியமான போட்டிதான்.''… 

""எல்லாத்தையும்விட தேர்தல் களப் போட்டிதானே முக்கியமானது. யாருக்கு எத்தனை சீட் கிடைக்கும்ங்கிற கணிப்புக்கணக்கு இன்னமும் ஓடிக் கிட்டுத்தான் இருக்குது. தி.மு.க அணிக்கு 20 சீட் நிச்சயம்னு இந்த வாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதியா இருக்காராம். காங்கிரஸ் தரப்பில் ஜி.கே.வாசன் உள்பட பலரும், அ.தி.மு.க.வின் கடைசிநேர பணவிநியோகம் பற்றி பேசுவதோடு,  அதனால எப்படியும் அ.தி.மு.க.வுக்கு 30 சீட் கிடைக்கும்னு சொல்றாங்களாம். இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி, அரசாங்கம் எல்லாத்தையும்விட சர்வவல்லமை பொருந்தியவரா இருந்த அதிகாரியே, ஆளுங்கட்சி எம்.பி. ஒருத்தர்கிட்டே, நாங்க கொஞ்சம் ஃப்ரீயா விட்டால், கடைசி 3 நாளில் நீங்க ரொம்ப ஆடிட்டீங்களேன்னு சொல்லியிருக்காராம்.'' 

""பா.ஜ.க அணியில் என்ன சொல்றாங்க?''

""அவங்க தரப்பிலும் நம்பிக்கையாத்தான் இருக்காங்க. விஜயகாந்த்தானே அந்த அணிக்காக தமிழகம் முழுக்கப் பிரச்சாரம் செய்தவர்.  அவரோட மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் ஷூட்டிங்கிற்காக  பொள் ளாச்சியில் இருந்தவர்கிட்டே, எலெக்ஷன் ரிசல்ட் எப்படி இருக்கும்னு கேட்டிருக் காங்க. பா.ஜ.க. இந்தியா அளவுல மெஜாரிட்டி சீட் ஜெயிக்காது. தமிழ்நாட்டுல பா.ஜ.க கூட்டணி 18 சீட்டுகளை ஜெயிக்கும்னும், அதிலும் தே.மு.திக.வுக்கு மட்டும் 8 சீட்டுகள் கிடைக்கும்னும் உறுதியா சொன்னாராம். மத்திய அரசில் ரயில்வே, நீர்வளத்துறைன்னு 2 கேபினட் வாங்குவதோடு, 2 இணையமைச்சர் பதவியும் தே.மு.தி.க.வுக்கு வாங்கிடணும்ங்கிறது அவரோட எதிர்பார்ப்பு. அன்பு மணி மறுபடியும் சுகாதாரத்துறை அமைச்சராயிடுவாருன்னும், வைகோ வுக்கு நல்ல இலாகா கிடைக்கும்னும், வேலூருக்கு மட்டும்  அத்வானி வந்து பிரச்சாரம் செய்ததால ஏ.சி. சண்முகத்துக்கும் அமைச்சர் பதவி உண்டுன்னும், பாரிவேந்தரும் மினிஸ்டர்தான்னும் சொல்றாராம். அதோடு, சுதீஷை சேலத்திலேயே வீடு பார்க்கவும் சொல்லிட்டாராம் விஜயகாந்த்.''

""இந்தளவுக்கு நம்பிக்கையா இருக்காங்கன்னா, போன முறை நம்ம நக்கீரனில் வெளியான மாதிரி, ஓட்டுப்போடாத மக்களெல்லாம் நாசமா போயிடுவாங்கன்னு அமைச்சர் பழனியப்பன் சொன்ன மாதிரிதான் மற்ற மந்திரிகளும் சாபம் விட வேண்டியிருக்குமா?''

""தலைவரே.. அமைச்சர் பழனியப்பன்கிட்டே மற்ற அமைச்சர்களும் இதைப் பற்றிக் கேட்டிருக்காங்க. நாங்களும் ரூமில் உட்கார்ந்து பேசும் போதெல்லாம், பணத்தை வாங்கிட்டு ஓட்டுப்போடாம ஜனங்க கவுத் திட்டா, நம்ம பதவி காலியாயிடும். பணம் வாங்குன ஜனங்க நாசமாத்தான் போகணும்னு பேசுவோம். அதை இப்படியா நீங்க ஓப்பனா பேசுவீங்கன்னு கேட்குறாங்களாம். கொடநாட்டுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் போயிருக்கு மோன்னு பழனியப்பன் பயந்தாலும், அம்மாவுக்கு சாதகமாத்தானே பேசியிருக்கோம்னு அவரே சமாதானம் சொல்லிக்கிறாராம்.''

""சேலத்திலும் நாமக்கல்லிலும் சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதற்கு  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதுக்கு ஜெ. எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்காரு. ஆனாலும், எலெக்ஷன் வேலைகளை அங்குள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் பார்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க. ஓட்டுக்கு 500 தருவதா, 1000 தருவதான்னு மேலே கேட்க, 200 போதும்னு உத்தரவு வந்திருக்காம். ஆக, மறுவாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு மறுபடியும் ஒரு இருநூறு. இதுதான் எனக்கு கிடைத்த லேட்டஸ்ட் தகவல்.''

ad

ad