புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின் நாடளாவிய ரீதியிலான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன இன்றைய தினமின சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள விசேட
நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த நேர்காணலின் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் அபேகுணவர்த்தன, தற்போதைய நிலையில் அரசாங்கம் எந்தத் தேர்தலை எதிர்கொண்டாலும் வெற்றிபெறும் நிலையில் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கோ எந்தத் தேர்தலை எதிர்கொண்டாலும் வெற்றியே கிடைப்பதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படவில்லை. ஆனால் எங்கள் அரசாங்கத்தில் எல்லாத் தேர்தல்களும் உரிய காலத்துக்கு முன்னரே நடத்தப்படுகின்றன. ஏனெனில் அரசாங்கம் அந்தளவுக்கு ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் என்னதான் பொது வேட்பாளரை நிறுத்தினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. ஏனெனில் ஜனாதிபதி அவர்கள் மக்களின் வேட்பாளர். அவரை தோற்கடிக்க எந்தவொரு பொது வேட்பாளருக்கும் முடியாது என்றும் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ad

ad