புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2014

தமிழ் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதி மறுப்பது காட்டுமிராண்டித்தனம்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்.
விடுதலைப் புலிகளை நினைவுகூரும் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு கண்டித்துள்ளது. இது மிகவும் மோசமான ஒரு மனிதஉரிமை மீறல் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, காண்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் ஆகும் வேளையில், அவர்களை நினைவுகூர்ந்து பொது நிகழ்ச்சிகள் ஏதும் நடத்துவதற்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. எனினும் அரசின் வெற்றியை கொண்டாடும் வகையில் தென்னிலங்கையில் பெரும் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தமிழ் மக்கள் மட்டும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செய்ய தடை விதிப்பது எந்த வகையில் நியாயமானது? தனியாக வீடுகளில் நினைவஞ்சலி சடங்குகளை அனுமதிப்பதாக இலங்கை அரசும் இராணுவமும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இறுதி யுத்தத்தின் போது கூட்டம் கூட்டமாக மக்கள் கொல்லப்பட்டார்கள், அப்படியிருக்கையில் கூட்டமாக அவர்களுக்கு அஞ்சலி செய்ய முடியாது எனக் கூறுவது சரியல்ல. தேவையில்லாத அடக்குமுறையை இலங்கை இராணுவம் கைக்கொள்வதாகவே தமிழ் மக்கள் இந்த நடவடிக்கையைப் பார்க்கின்றனர் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

ad

ad