புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2014

                                     கொழும்பில் மீண்டும் குறிவைக்கப்படும் தமிழர்கள்
                                                                                                                      கொழும்பு நகரில் அண்மைக் காலமாக தமிழ் மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் வழிப்பறி நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. குறித்த சில இனந்தெரியாத நபர்களால் தாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறியும் அடையாள அட்டையைக் காட்டுமாறு மிரட்டியும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கிஸை பகுதியில் இரு தமிழ் ஆசிரியைகள் அணிந்திருந்த ஆபரணங்களை அபகரிக்க முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் கல்கிஸைப் பகுதி தமிழ்ப் பாடசாலையொன்றில் பணியாற்றுகின்றேன். காலை வேளையில் பிரதான பாதையைக் கடக்க முற்பட்ட சமயத்தில் நெடிய தோற்றத்துடன் பின்னால் ஒருவர் அழைத்தார். தான் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், விசாரணையின் பொருட்டு எனது அடையாள அட்டையை காண்பிக்குமாறும் அதிகாரத் தொனியில் கேட்டார். உடனே நானும் அடையாள அட்டையைக் காட்டினேன். இணைக்கும் நொடியில் அவருடன் இணைந்து கொண்ட இன்னொருவர் எனது கையிலிருந்த மோதிரத்தை கழற்றுமாறும் மிரட்டினார். அதிர்ஷ்டவசமாக பின்னால் வந்த பொலிஸ் வண்டியைக் கண்டதும் இருவரும் விரைந்து சென்று விட்டார்கள். இவ்வாறானதொரு சம்பவம் என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியை ஒருவருக்கும் இடம்பெற்றுள்ளது எனக் கூறினார்

ad

ad