புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014



"எல்லா அப்பாக்களும் தன் பிள்ளை களுக்கு பொம்மை வாங்கிக் கொடுப்பார்கள்!

ஆனால் தன் பிள்ளைக்காக தானே பொம்மையாக மாறியிருக்கிறார் ரஜினி!'.

"கோச்சடையான்' படம் பற்றி இப்படி குறும்பு கொப்பளிக்கும் குதர்க்கத்தோடு எழுந்த "மவுத்டாக்'தான் "கோச்சடையா'னுக்கு முதல் பின்னடைவாக அமைந்தது.

""நாங்கள் தெளிவாகவே சொல்கிறோம்! இது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான 3டி படம்!'' என படத்தின் இயக்குநர் சௌந்தர்யா அஸ்வின் ரஜினி விளக்கிச் சொன்ன பிறகும் கூட "இது உண்மையில்ல... பொம்மை' என பாடித் தீர்த்து விட்டார்கள். இதனால் வியாபார அளவில் பின்னடைவு உண்டானது.

"கோச்சடையான்' படம் சுமார் இரண்டு வருட கால புராடெக்ட். இந்தப் படத்தைத் தயாரிக்க "மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்' உரிமையாளர் டாக்டர் முரளி மனோகர் பல இடங்களிலும் ஃபைனான்ஸ் பெற்றிருந்தார். (இராம.நாரா யணன், மதுரை அன்பு, அபிராமி ராமநாதன் உள்ளிட்டவர்களிடம் முரளி மனோகர் ஃபைனான்ஸ் வாங்கியிருந்ததையும் அந்த நெருக்கடியால் பஞ்சாயத்து நடந்ததையும் ஏற்கனவே தெளிவாகவே கூவியிருந்தேன்).

இந்த கடன்களெல்லாம் வட்டி போட்டு பெரும் தொகையாக உருவெடுத்ததால் படத்திற்காக திட்டமிடப்பட்ட வரவை விட கடன் எகிறியது.

இதனால்... படத்தின் விலையை உயர்த் தியது மீடியா ஒன். இதனால் விநியோகஸ் தர்கள் "ஒவ்வொரு தியேட்டரும் பத்து லட்ச ரூபாய் தரவேண்டும்...' எனக் கேட்டனர்.

"இதை ரஜினி படம்' என வாங்குவதா?' "கிராபிக்ஸ் படம் என கைவிடுவதா?' என்கிற குழப்ப நிலைக்கு ஆளான தியேட்டர்காரர்கள் "படத்தை போட்டுக்கங்க... வசூலில் ஷேர் குடுங்க' என நழுவிவிட்டனர்.

வியாபாரத்தை நம்பி ஃபைனான்ஸி யர்களுக்கு மீடியா ஒன் செக் செட்டில்மென்ட் செய்திருந்தது. ஆனால் வியாபாரம் சொதப் பியதால் செக்... ரிட்டர்ன் ஆகிவிட்டது. உதா ரணத்திற்கு  ... மதுரை அன்புவிற்கு தரவேண் டிய தொகைக்கு இரண்டு செக் கொடுத்திருந்தனர். ஒண்ணு பாஸாச்சு. இன்னொண்ணு ஃபெயிலாச்சு.

இதேபோல் "ஓரியண்ட்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ்' வங்கிக்கு தர வேண்டிய 11 கோடி ரூபாயை பட ரிலீஸுக்கு முன் செட்டில்மென்ட் செய்து விடுவதாக படத்தை "உலக ரிலீஸ்' பண்ணும் ஈராஸ் நிறுவனம் சொல்லியிருந்ததாம். அது செட்டில் செய்யப்படாததால் பட ரிலீஸுக்கு அந்த வங்கி கிளியரன்ஸ் தரவில்லையாம்.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 70 கோடிக்கு பிசினஸ் பண்ணி சுமார் 40-50 கோடி கடனை அடைக்க திட்டமிட்டது மீடியா ஒன். ஆனால் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர் களின் "எதுக்கு ரிஸ்க்?' எண்ணத்தால் திட்டமிட்ட வியாபாரம் நடக்காததால் திணறி நிற்கிறது "கோச்சடையான்' படம்.

"இது பொம்மைப் படம்' என வியாபார வட்டத்தில் பேச்சிருந்தாலும் ரசிகர்களிடம் படத்திற்கு உற்சாக வரவேற்பு இருந்திருக்கிறது. "மே 9-ந்தேதி படம் ரிலீஸ்' என அறிவித்த பிறகு... மே 5 மற்றும் 6-ந்தேதிகளில் முன்பதிவு அமோகமாகவே நடந்திருக்கிறது.

சென்னையில் சத்யம் தியேட்டர் கட்டுப்பாட்டில் உள்ள 18 தியேட்டர்களிலும் "கோச்சடையான்' புக்கிங் சிறப்பாகவே இருந்திருக்கிறது.

"நடிப்பியக்க பதிவு' எனப்படும் மோஷன் கேப்ஸர் முறையில்... அதாவது நட்சத் திரங்களை சில மூவ்மெண்ட்ஸ் கொடுக்க வைத்து அதை கேமராவில் பதிவு செய்து... அதை உருவகப்படுத்தியிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் இணைப்பதுதான் இந்த  முறை.

ஹாலிவுட்டில் இது பிரபலமென்றாலும் இந்திய சினிமாவில் இத்தொழில்நுட்பத்தின் முதல் முழுப்படம் "கோச்சடையான்'. இதை புரிந்து வைத்திருக்கும் மேல்தட்டு ரசிகர்களிடமும் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால்... வியாபார வில்லங்கம் அலைக்கழிக்கிறது.

இந்நிலையில் "தொழில் நுட்ப கார ணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. மே 23-ல் "கோச்சடையான்' ரிலீஸ்!'' என ஈராஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ad

ad