புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

news
 நைஜீரியாவில் மாணவிகளை மீஎட்க தயார் நிலையில் உலக நாடுகள்
இதற்கு உதவி வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதற்கு உதவி
 
நைஜீரிய நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் பணியில் உதவ உலக நாடுகள் முன்வந்துள்ளன. இந்தா நிலையில் அமெரிக்க கண்காணிப்பு விமானங்களும் இந்தப் பணியில் ஈடுபடும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
 
போகோ ஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு, கடந்த மாதம் 14-ம் திகதி  நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலம் சிபோக் கிராமத்தில் உள்ள பாடசாலையில் இருந்து 200 மாணவிகளைக் கடத்தி சென்றனர்.
 
கடத்தப்பட்ட மாணவிகளை மீட்க நைஜீரிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியிலேயே  முடிந்தது. 
 
மாணவிகளை மீட்க உதவி செய்யும்படி நைஜீரிய அரசும் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகள் எதையும் எடுக்க மாட்டோம் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.
 
இந்த நிலையில், நைஜீரிய எல்லையில் அமெரிக்க ராணுவ விமானங்களைக் கொண்டு, கடத்தப்பட்ட மாணவிகள் மற்றும் போகோ ஹோரம் தீவிரவாதிகளை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது


மாணவிகளை மீட்க தயாராகும் உலக நாடுகள் 

ad

ad