புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014


இறந்த பெண் குழந்தையுடன், இருநாட்கள் சுற்றித்திரிந்த ஆதரவற்ற இளம்பெண்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ளது ஆர்.சி.செட்டிப்பட்டி. இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில், நேற்று காலை ஆறு மணியளவில், இளம்பெண் ஒருவர் கையில் குழந்தையுடன், அழுதபடி நின்றிருந்தார்.

அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்ததில், கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல தெரிந்துளார். அவரது கையில் வைத்திருந்த, மூன்று வயது பெண் குழந்தை, இறந்து போயிருப்பது தெரியாவந்தது.

அந்த பெண்ணின் மீது சந்தேகம் கொண்ட ஊர்மக்கள் இறந்து போன குழந்தையுடன் இருந்த இளம் பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து ஓமலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் பாதுகாப்புடன் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தையையும், பெண்ணையும் அனுப்பி வைத்தனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதும், குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருப்பதும் தெரிந்தது. உடற்கூறு ஆய்வுக்காக குழந்தையின் உடலை பிணவறையில் வைத்தனர்.

அதன்பிறகு, ஓமலூர் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த பெண், ஓசூர், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்த மல்லிகா, (வயது-27) என்பதும், இவரது பெற்றோர், ஏற்கனவே இறந்து விட்டதும், பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தருமபுரி மாவட்டம், பொம்மிடியை சேர்ந்த பழனி என்ப வருக்கும் மல்லிகாவுக்கும் முன்பு திருமணம் நடந்துள்ளது.

கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மல்லிகா, ஓசூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருக்கும், முத்து, பவளக்கொடி தம்பதியின் பாதுகாப்பில் இருந்து வந்ததுள்ளார். அங்கிருந்துகொண்டு, மல்லிகா வேலைக்குச் செல்லும்போது, குழந்தையை, முத்து மற்றும் பவளக்கொடி ஆகிய இருவரும் பாதுகாத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மர்மமான முறையில், குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, உடல் முழுவதும் காயங்களுடன், இறந்து போன குழந்தையை மல்லிகாவிடம் அந்த தம்பதியினர் ஒப்படைத் துள்ளனர்.

இறந்துபோன குழந்தையுடன், எங்கே செல்வது எனத்தெரியாமல் தடுமாறிய மல்லிகா, ஏற்கனவே வந்திருந்த ஓமலூர், ஆர்.சி.செட்டிப்பட்டி, கிறிஸ்தவ தேவாலயத்துக்கு உதவி கேட்டு வந்தது விசார ணையில் தெரியவந்தது.

இறந்து போன குழந்தையின் உடலில் காயங்கள் உள்ளதால், குழந்தையை பாதுகாத்து, பராமரித்து வந்த முத்து, பவளக்கொடி தம்பதியை விசாரிக்கும்படி, ஓமலூர் போலீஸார், ஓசூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ad

ad