புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014





கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பற்றி விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு ஹைவோல்டேஜ் அதிர்ச்சிதரும் தகவல்கள் கிடைத்தபடியே இருக்கின்றன.

மே ஒன்றாம் தேதி காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய 9-ஆம் நம்பர் நடை மேடையில் வந்து நின்றது கௌஹாத்தி எக்ஸ்பிரஸ். அது வந்து நின்ற ஏழெட்டு நிமிடங்களில் எஸ்-4, எஸ்-5 கோச்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் பயங்கரமாக வெடித்தன. இதில் ஆந்திராவைச் சேர்ந்த 24 வயது, சாப்ட்வேர் இளம் பெண் சுவாதி, ஸ்பாட்டிலேயே துடிதுடித்து இறக்க, 15 பேருக்கு மேல் படுகாயம் அடைந்தனர்.

சுவாதியின் நெஞ்சுப் பகுதியில் வெடிகுண்டுத் துகள்கள் பாய்ந்து காயத்தை உண்டாக்கியிருந்தன. இந்த சம்பவத்தில், மார்பில் குண்டுத்துகள்கள் பாய வாய்ப்பு இல்லையே என முதலில் புலனாய்வு அதிகாரிகள் தலையைப்  பிய்த்துக்கொண்டனர். வெடிகுண்டு குறித்த புலனாய்வில் எக்ஸ்பர்ட் அதிகாரியான வள்ளிநாயகம் ஸ்பாட்டில் நீண்டநேரம் ஆராய்ந்து பார்த்துவிட்டு, சீட்டில் சுவாதிகுப் புறப்படுத்துத் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில் குண்டு வெடித்ததால் குண்டுத் துகள்கள், அவரது மார்புப் பகுதியில் பாய்ந் திருக்கின்றன என்று கண்டுபிடித்தார். அதே போல் குண்டுகள், பேக்குகளில் கொண்டுவரப் பட்டிருப்பதும் அந்த பேக்குகளை எளிதில் திறக்க முடியாதபடி கம்பி வளையம் போட்டு சின்னதாய் பூட்டு போடப்பட்டதையும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.


இதேபோல் வெடித்த வெடிகுண்டுகளின் தன்மையை ஆராய்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் ""கன்பவுடருடன் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு கூர்மையான ஆணிகள், பால்ரஸ்கள் போன்றவை இந்த வெடிகுண்டுகளில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன'' என்று சொல்ல, இதைக் கேட்டுத் திகைத்துப்போன சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மேலப்பாளையத்தில் கிச்சான்புகாரி டீமை வளைத்த விசாரணை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டனர்.

அந்த அதிகாரிகள், ""மதுரையில் அத்வானியைக் கொல்ல  வைக்கப்பட்ட வெடிகுண்டிலும், பெங்களூரு பா.ஜ.க. அலுவலகத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டி லும் மோடியைக் குறிவைத்து பாட்னாவில் வைக்கப்பட்ட வெடிகுண்டிலும் இதே அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தொழில் நுட்பத்திலும், ஒரே மாதிரி இந்த வெடிகுண்டுகள் ஒத்துப்போகின்றன. எனவே ஒரே டீம்தான் இந்த வேலைகளைச் செய்திருப்பதாகத் தெரிகிறது'' என்றனர். 

மேலப்பாளைய புலனாய்வு ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி ஒருவரிடம் இந்த வெடிகுண்டு பற்றி நாம் விசாரித்தபோது, அதிரவைக்கும் தகவல்களை அடுக்க ஆரம்பித்தார்.

""அல்உம்மா தீவிரவாத இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டவுடன், இந்திய முஜாகிதீன் என்ற மற்றொரு பெயரில் அவர்கள் இயங்கத் தொடங்கினார்கள். பெங்களூருவைச் சேர்ந்த யாசின்பட்கலும், ரியாஸ் பட்கலும்தான் இந்த அமைப்பின் இந்திய தலைமைப் பொறுப்பாளர்கள். சகோதரர்களான இவர்கள், காவல்துறையிடம் சிக்கிக்கொண்டனர். இதன்பின் ராஞ்சியைச் சேர்ந்த அன்சாரி இந்த இயக்கத்தின் தலைவனானான். கடந்த அக்டோபரில் நரேந்திர மோடி பாட்னா வந்தபோது, அங்கு குண்டு வெடித் தது. விசாரணையில் அன்சாரி மடக்கப்பட்டான். எனவே தற்போது இந்த அமைப்பை வழி நடத்துகிறவன் அபுபக்கர் சித்திக். இவன் மிகவும் டேஞ்சரஸ் ஆள்.

இந்த சித்திக் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவன். இவன் 93-ல் நாகை இந்துமுன்னணி பிரமுகர் முத்துகிருஷ்ணனுக்கு புத்தக வெடிகுண்டை அனுப்பி னான். அந்த வெடி பார்சலைப் பிரித்த முத்து கிருஷ்ணன் மனைவி தங்கம், சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். அப்போது தலைமறைவான அபுபக்கர் சித்திக் இடைக்காலத்தில் வலிமையான தீவிரவாதியாக உருமாறிவிட்டான். இவன் டைமரோடு கூடிய வெடிகுண்டை தயாரிப்பதில் ஸ்பெஷலிஸ்ட். 


97-ல் சேரன் எக்ஸ்பிரஸ், திருச்சூர் எக்ஸ் பிரஸ், ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் குண்டுகள் வெடித்தன. 6 பேரை பலிகொண்ட இந்த குண்டு வெடிப்பில் அபுபக்கர் சித்திக் தொடர்புடையவன். இவனுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் "இஸ்லாமிக் டிபன்ஸ் போர்ஸ்' என்ற தீவிரவாத அமைப்பின் தலைவனான அபுஉமரின் தொடர்பு கிடைத்தது. அவன்மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஏஜெண்டாக மாறினான் அபுபக்கர்.

அங்கிருந்து சில வருடங்களுக்கு முன் தமிழகம் திரும்பியவன், இந்துத்வா அமைப்பு களைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு ஸ்கெட்ச் போட ஆரம்பித்தான். அவன் குறிவைத்த நபர்களைத் தான் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் டீம் கொன்றது. இந்த டீமால் கொல்லப்பட்டவர்கள்தான், வேலூர் இந்து முன் னணி வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் டாக்டர் அரவிந்த் ரெட்டி போன்றவர் கள்'' என தகவல்களை அடுக்கிய அந்த அதிகாரி மினரல் வாட்டரை வாயில் சரித்துவிட்டுத் தொடர்ந்தார்.

""இந்த போலீஸ் பக்ருதீன் டீமுக்கு நாங்கள் குறிவைத்தபோது, இவர்கள் மேலப்பாளையம்  கிச்சான்புகாரியோடு தொடர்பில் இருப்பவர்கள் என்று தெரியவந்தது. நாங்கள் மேலப்பாளையத் தைச் சலித்தெடுத்தபோது, கிச்சானின் தோஸ்து களான கட்டை சாகுல்,  தாசின், பிஸ்மி போன்ற 5 பேர் சிக்கினார்கள். பிடிபட்ட கிச்சானின் சிஷ் யர்களிடம் விசாரித்தபோது, கேரளா மற்றும் கர் நாடகாவில் இருந்து வெடிமருந்துகளை கிச்சான் டீம் கடத்தி வந்த தகவல் கிடைத்தது. இதேபோல் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த பிரகாஷ் போன்ற வெளிநபர்களும் இவர்களுக்கு ஏஜெண்டுகளாக இருந்து வெடிமருந்துகளை வாங்கி அனுப்பியிருக்கிறார்கள். இப்படி ஏறத்தாழ 100 கிலோ வெடிமருந்து வரை இவர்கள் கடத்திவந்து ஸ்டாக் வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு பகுதி யான 18 கிலோ வெடிமருந்தை நாங்கள் மேலப்பாளையத்தில் கைப்பற்றிவிட்டோம். பெங்களூரு, பாட்னா போன்ற வெடி குண்டு சம்பவங்களின்போது அவர்களது ஸ்டாக்கில் கொஞ் சம் தீர்ந்திருக்கலாம். தற்போது கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் 2 குண்டுகள் வெடித்திருக்கின்றன. இதையெல்லாம்  கூட்டிக் கழித்துப் பார்த்தால் இன்னும் 50 கிலோவுக்கும் குறையாத வெடிமருந்துகள் அவர்கள் கைவசம் இருக்கலாம். அவற்றை பிடிக்கும்வரை, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்'' என்றார் கவலையாக. ஏற்கனவே பிடிபட்டவர்கள் மூலமே இந்த மிச்சசொச்ச வெடிமருந்துகளைக் கைப்பற்றியிருக்க லாமே? என்ற நம் சந்தேகத்தைக் கேட்டோம். 

அந்த அதிகாரியோ, ""அது ஒரு பெரிய டீம். அந்த டீமிற்குள் சின்னச் சின்ன டீம்கள் நிறைந்திருக்கும். ஒரு டீமில் இருப்பவர்களும் இன்னொரு டீமில் இருப்பவர்களும் எந்தவித தொடர்பிலும் இருக்கமாட்டார்கள். எல்லா டீம்களையும் இணைத்திருக்கும் அபுபக்கர் சித்திக் பிடிபட்டால் மட்டுமே  எங் கெங்கே எவ்வளவு வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருக்கிறது? எங்கெங்கே யார், யார் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்? என்று தெரிந்துகொள்ள முடியும்.

பெங்களூரு, கேரளா என பல மாநிலங்களிலும் ஸ்லீப்பர்செல் நபர்கள் எதற்கும் தயார்நிலையில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் இருக்கும் 60 ஸ்லீப்பர்செல் நபர்களையும் தன் கண்ட் ரோலில் வைத்திருப்பவன் கோவையைச் சேர்ந்த நொமி. இப்போது நடந்த கௌ ஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் அபுபக்கர் சித்திக்குடன் இந்த நொமியும் இணைந்து செயல்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

அபுபக்கர் சித்திக், தனது ஆட்கள் மூலம் நடத்தும் டேஞ்சரஸ் ஆபரேஷன்களின்போது, அருகே ஸ்பாட்டில் இருந்து அதை கண்காணிக்கக் கூடியவன். ஆடிட் டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன், டாக்டர் அரவிந்த் ரெட்டி மர்டரின்போது அபுபக்கர் சித்திக் ஸ்பாட்டில் இருந்திருக்கிறான். அதேபோல் பெங்களூரு, பாட்னா போன்ற குண்டு வெடிப்புகளின்போதும் ஸ்பாட்டில் இருந்திருக் கின்றான். எனவே கௌஹாத்தி ரயில் குண்டு வெடிப்பிலும் அவன் ஸ்பாட்டில் இருந்திருக்கலாம். அவனது தற்போதைய புகைப்படம் எங்களிடம் இல்லாததால் அவன் அலட்சியமாகத் தப்பிச் செல்கிறான். போலீஸ் பக்ருதீன் டீமிடம் விசாரித்த வகையில் அபுபக்கர் சித்திக் 6 அடி உயரம் கொண்டவன்.  வழுக்கைத் தலையுடன் இருப்பவன். பளீரென்று ஹைடெக் ஆசாமியாக உலவுகிறவன். இவனுக்கு செல்போனை வைத்துக்கொள்கிற பழக்கம் இல்லை. காயின் போன்பூத்கள் மூலமே தன் சகாக்களைத் தொடர்புகொண்டு அழைத்து க்ரைம் அசைன்மெண்டுகளைச் கொடுப்பான். க்ரைம் ஆபரேசன்களுக்குப் போகும்போது, பஸ், ரயிலில் மக்களோடு மக்களாகப் பயணிப்பான். அவனைப் பற்றி அணுவணுவாகத் தெரிந்து வைத்திருக்கிறோம். ரயிலில் இருந்து அவசரமாக ஓடுபவன் சித்திக்காகத்தான் இருக்க வேண்டும். விரைவில் அவனை மடக்கிவிடுவோம்'' என்றார் நம்பிக்கையோடு.

இந்த ரயில் குண்டு வெடிப்பு குறித்து பெங்களூருவில் கேம்ப் அடித்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் சி.பி.சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வாலிடம் ""இந்த விவகாரத்தில் அபுபக் கர் சித்திக்கிற்கும் தொடர்பு இருக்கிறதா?'' என்றோம்.

""அப்படித்தான் தெரி கிறது. தீவிரமாக விசாரித்துக்கொண்டிருக்கிறோம்'' என்றார்.

மீண்டும் அந்த மேலப்பாளையம் புலனாய்வு அதிகாரியை சந்தித்து ""வெடிகுண்டு வைத்ததன் நோக்கம் என்னவாக இருக்கும்?'' என்றோம். 

ஒருகணம் விழிகளை மூடி, புருவ மத்தியை விரலால் அழுத்திக்கொண்ட வர், ""இது ஒரு ட்ரயல் குண்டு வெடிப் பாக இருக்கலாம். மோடி ஆட்சிக்கு வந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்கள் நடந்தால், அப்போது பதி லடி கொடுக்க தீவிரவாதிகள் ஒரு சோத னை வெடிகுண்டை வெடித்துக் காட்டி யிருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ட்ரயலே இப்படியென் றால்... நாளை?'' என்று பகீரூட்டினார். 

குண்டுவெடிப்பு குற்றவாளிகளை முழுதாக வளைக்கும்வரை இந்தியாவைக் கப்பியிருக்கும் திகிலான மேக மூட்டம் விலகாது.

-பரமசிவன், தாமோதரன் பிரகாஷ்




மதபோதகர் வேடத்தில் பள்ளிவாசலில் தங்கியிருந்த "இந்தியன் முஜாகிதீன்' அமைப்பைச் சேர்ந்த டேஞ்சரஸ் தீவிரவாதியான அஸ்ரப் அலியை ஒரே அமுக்காக அமுக்கியிருக்கிறது போலீஸ் டீம். அஸ்ரப் அலி, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவன். வாரணாசி, புனே தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவன். எனவே கடந்த 3 மாதங்களாக இவனை ராஜஸ்தான் மத தீவிரவாத தடுப்புப் படையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அஸ்ரப் அலியோ, ஒரு இஸ்லாமிய மத போதனை டீமில், தன்னை மத போதகர் போல காட்டிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தவன், அவர் களுடன் கடலூர் மாவட்டத்தில் பல பள்ளிவாசல் களிலும் டேரா அடித்தான். அந்த மத போதனைக் குழுவில் உ.பி.யைச் சேர்ந்த 9 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரும் இருந்தனர்.

கடைசியாக பரங்கிப்பேட்டை ஆற்றங்கரையில் இருக்கும் 950 ஆண்டு தொன்மைமிக்க பள்ளி வாசலான இதார் நபி பள்ளிவாசலில் கடந்த 9 நாட் களாகத் தங்கியிருந்தான். அவனது செல்போன் நம்பர்களை ட்ரேஸ் செய்த ராஜஸ்தான் டீம், அவன் தமிழகத்தில் உள்ள பரங்கிப் பேட்டையில் டேரா அடித்திருப்பதைக் கண்டுபிடித்தது. உடனே ராஜஸ்தானில் இருந்து டி.எஸ்.பி.குஷால்சிங் தலைமையில், இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திரசிங் ரத்தோர் அடங்கிய 7 பேர் டீம், தமிழகம் வந்தது.

கடலூர் எஸ்.பி.ராதிகாவை சந்தித்த ராஜஸ்தான் டி.எஸ்.பி. குஷால்சிங், தீவிரவாதி அஸ்ரப் அலியைப் பிடிக்க தமிழக போலீஸின் ஒத்துழைப்பைக் கேட்டார். எஸ்.பி.யோ மேலிடத்தில் தெரிவித்து அங்கிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்ததும் சிதம்பரம் டி.எஸ்.பி. ராஜாராம் தலைமையிலான டீமைக் களமிறக்கினார். டி.எஸ்.பி.ராஜாராம் இந்தி, உருது என பல மொழிகளிலும் பேசக்கூடியவர்.

பரங்கிப்பேட்டை வந்த டி.எஸ்.பி.ராஜாராம், இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் கேப்டன் அப்துல் காதரைத் தொடர்பு கொண்டு ""இதார் நபி பள்ளிவாசலில் இருக்கும் தப்ளிக் ஜமாத்துடன் ஒரு விஷயமாக கலந்து பேச வேண்டும். உதவுங்கள்'' என்றார். அப்துல் காதரோ, கிதார் நபி பள்ளிவாசலின் முத்தவல்லியான சாகுல் ஹமீதுக்குத் தகவல் கொடுத்தார். இதைத் தொடர்ந்து முதலில் டி.எஸ்.பி.ராஜாராம் அந்தப் பள்ளிவாசலுக்குள் சென்றார். அங்கிருந்த மத போதகர்களிடம் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அஸ்ரப் அலி அங்கே சாது வாக உட்கார்ந்திருந்தான். அடுத்த கொஞ்சநேரத்தில் முஸ்லிம் தோற்றத்தில் இருவர் அந்தப் பள்ளிவாசலுக் குள் செல்ல, அங்கிருந்த ஜமாத்தினர் ""நீங்கள் யார். புது ஆளா இருக்கீங்களே'' என்றனர். அப்போது டி.எஸ்.பி. ராஜாராம், ""அவர் கள் எங்கள் டிபார்ட்மெண்ட் ஆட்கள்'' என்று சொல்ல, ஜமாத்தினர் திகைத்தனர். அதேநேரம் உள்ளே நுழைந்த ராஜஸ்தான் டி.எஸ்.பி.குஷால்சிங், அஸ்ரப் அலியைப் பார்த்து ""டேய் அஸ்ரப் அலி, எங்களோடு உன் பேக்கை எடுத்துக்கொண்டு வா'' என கடும் குரலில் உத்தரவிட்டார். அவரைக் கண்டதும் மிரண்டு போன அஸ்ரப் அலி, நேராக அறைக்குள் சென்று ரெண்டு நிமிடம் மண்டியிட்டு தொழுதான். பின் தன் பேக்கை எடுத்துக் கொண்டு வந்தான். அவனை காரில் ஏற்றி, ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தின் மாடி அறைக்கு அழைத்துச் சென்று விசாரணையைத் தொடங்கினர்.

கிதார் நபி பள்ளிவாசல் முத்தவல்லி சாகுல் அமீது, ""மத போதகர்களோடு ஒரு தீவிரவாதி இங்க ஊடுருவி வந்ததை நினைச்சா அதிர்ச்சியா இருக்கு. அந்த டீம் 4-ந்தேதி டெல்லிக்குப் போக இருந்தது. அதற்குள் அந்த அஸ்ரப் அலி பிடிபட்டது நல்லதாப் போச்சி. இல்லேன்னா தப்பி இருப்பான்'' என்றார் நம்மிடம்.

பள்ளிவாசலில் தீவிரவாதி பிடிபட்ட விவகாரம் பதட்ட பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

ad

ad