புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014


தேசிய பிரச்சினை தீர்க்க இந்திய முக்கிய பங்கை வகிக்க முடியும்: இரா சம்பந்தன்
இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதில் இந்தியா பிரதான பங்கை வகிக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை கூறியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் பெற்ற பிரமாண்டமான வெற்றிக்காகவும், பாரத தேசத்தின் பிரதமர் என்ற உயர் பொறுப்புக்காக நீங்கள் பெறுகின்ற நியமனத்திற்காகவும், இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறோம்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்குள் சம உரிமை, நியாயம் மற்றும் நிரந்த சமாதானத்தை ஏற்படுத்த சந்தரப்பம் ஏற்பட்டது.
நாட்டுக்குள் அவற்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் பிரதானமாக 6 தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஒரு அரசியற் தீர்வை வழங்குவேன் என இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதியை மதித்து இலங்கை அரசாங்கம் நடக்கவில்லை.
கடும்போக்கான ஓர் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசாங்கம் முனைப்பாக முன்னெடுத்து வருகின்றது.
அரசியற் தீர்வை வழங்குவேன் என்ற வாக்குறுதியை – போர் நிகழ்ந்த காலத்திலும், போரின் முடிவிற்குப் பின்னாலும் - இந்தியாவிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள், நல்லிணக்க முயற்சிகளையும் நிரந்தர அமைதி ஏற்படும் சூழலையும் மேலும் பலவீனப்படுத்துவது மட்டுமன்றி எதிர்ப்புணர்வுகளையே உருவெடுத்து வளரச் செய்யும். இத்தகைய ஒரு நிலைமையைத் தமிழ் மக்கள் நிச்சயமாக விரும்பவில்லை.
இலங்கை அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு அரசியல் தீர்வை உருவாக்கி எடுப்பதில் அது விசுவாசமாக இல்லை என்பதையே தெளிவாக காட்டுகின்றன என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நாங்கள் அப்படி கருதுவது ஏனென்றால் - நீதியினதும் சமத்துவத்தினதும் அடிப்படையிலான கௌரவமான ஓரு சமாதானம் எங்கள் நாட்டில் உருவாகும் என்ற நாங்கள் நம்புவதாலும் பாரத தேசம் வகிக்கின்ற பாத்திரம் அதனை உறுதிப்படுத்தும் என்பதனாலும் ஆகும்.
உங்களையும் உங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏனையவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை உங்களால் முடிந்த அளவுக்கு விரைவாக எமக்கு வழங்குமாறும் நாம் வேண்டுகின்றோம் எனவும் சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

ad

ad