புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2014



தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஞானதேசிகன் பதவி விலக வேண்டும்; ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் அறிக்கை
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்
போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வள்ளல்பெருமான், கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி, அப்துல் காதர், கார்த்தி ப.சிதம்பரம், தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், சேவாதள பிரிவு தலைவர் செல்வராஜ் உள்பட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். 
அதில் கூறப்பட்டுள்ளதாவது:–
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் அகில இந்திய அளவில் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. அதிலும் தமிழகத்தில் மிகவும் மோசமாக 4.31 சதவீத வாக்குகள் பெற்றதற்கு காரணம் என்ன?, தமிழக காங்கிரஸ் தலைமை இந்தத் தேர்தலில் சரிவர செயல்படவில்லை.
மற்ற கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தனர். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் முறையாக காங்கிரஸ் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்து கூட்டம் போடவில்லை.
தமிழக காங்கிரஸ் சார்பில் பிரசாரத்திற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மாநில அளவில் பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்தும் செயல்படவில்லை. அகில இந்திய தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதில் கூட பாரபட்சமாக நடந்து கொண்டு அவர்களை நோகடித்தது, இப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயல்படத் தவறியதால், இந்த வீழ்ச்சிக்கு முழுப் பொறுப்பும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரைத்தான் சேரும்.
இனி, தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் தலையெடுக்க வேண்டுமென்றால் தமிழக காங்கிரசில் விவேகமாகச் செயல்படுகின்ற ஒரு தலைமையைத் தான் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, இத்தோல்விக்கு முழுப்பொறுப்பேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

ad

ad