புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

 மாதகல் வீதியும் மறிப்பு; பிரதேச தவிசாளர்களை திருப்பி அனுப்பியது இராணுவம் 
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இறந்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை செய்ய மாதல் வீதியூடாக கீரிமலை செல்வதற்கு சென்ற உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.


வலி.தென் மேற்கு பிரதேச சபை தலைவர், வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் மற்றும் வலி. மேற்கு பிரதேச சபை தலைவர் ஆகிய மூவரையுமே மாதகல் சந்தியில் வைத்து உள் நுழைய முடியாது என கூறி இராணுவத்தினர் திருப்பியனுப்பியுள்ளனர்.

மே - 18 ஆம் நாளான இன்று முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலையில் ஆத்ம சாந்திப்பூஜை மற்றும் பிதிர்க்கடன் செய்ய செல்லக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த தடை உத்தரவினை இராணுவத்தினர்  விதித்துள்ளனர் .

மேலும் தெல்லிப்பழை வீதியும் இராணுவத்தினரால் மறிக்கப்பட்டிருந்தது. இதனால் பலர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

எனினும் கீரிமலையில் இன்றைய தினம் பிதிர்க்கடன் வழிபாடு நடைபெற்று அன்னதான நிகழ்வும் இடம்பெற்றன. இன்றைய விசேட பூஜையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad