புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014


நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை மாநாட்டில் மோடி கலந்து கொள்வார்: பான் கீ மூன் நம்பிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், மோடியை ஐ.நா.சபைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாரா? நரேந்திர மோடிக்கு ஐ.நா.சபை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதா? என்று பான் கீ மூனின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபனே துஜாரிக்கிடம் நியூயார்க்கில் நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் சுமுகமாக நடந்து முடிந்ததற்காக கடந்த வாரம் ஐ.நா. செயலாளர் அனைத்து கட்சிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். மேலும் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றதற்காக மோடிக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதற்கு தகுதியான நாடு இந்தியா என்பதை நடந்து முடிந்த தேர்தல் நிரூபித்து இருக்கிறது என்றும் ஐ.நா. செயலாளர் பாராட்டு தெரிவித்தார்.
வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐ.நா.சபை கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்பார். குறிப்பாக பருவநிலை மாறுதல் தொடர்பான உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை பான் கீ மூனிடம் உள்ளது.
ஏனெனில் பருவ நிலை மாற்றம் தொடர்பான விஷயத்தில் இந்திய பெரும் பங்கு வகித்து வருகிறது. மேலும் இதில் தனது முக்கிய பங்களிப்பை தொடர்ந்து அளிக்கும். எனவே, செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை மாநாட்டில் நாங்கள் மோடியை காண்போம் என்று நம்புவதாகவும் பான் கீ மூன் தெரிவித்து இருக்கிறார். இவ்வாறு துஜாரிக் கூறினார்.

ad

ad