புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014

அமெரிக்க இராணுவம் நைஜீரிய மாணவிகளை மீட்கும்- ஒபாமா அறிவிப்பு 
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அமெரிக்க இராணுவத்தினர் மீட்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.


நைஜீரியா நாட்டில்,  போகோ ஹரம்' என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பால் கடந்த 14ம் திகதி, சுமார் 272 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டனர்.

இந்த மாணவிகளை விபச்சார சந்தையில் விற்றுவிடுவதாக மிரட்டல் விடுத்த 'போகோ ஹரம்' தீவிரவாதி அமைப்பின் தலைவர் அபூ பெக்கர், தங்கள் தோழர்களை விடுவித்தால் மட்டுமே மாணவிகளையும் விடுதலை செய்ய முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடத்தப்பட்ட மாணவியர், எங்கிருக்கின்றனர், என்ன ஆனார்கள், என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

எனவே மாணவிகளை மீட்பதற்கான தீவிர தேடுதல் பணியில் அமெரிக்க இராணுவ வீரர்கள் செயல்பட்டு வருவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,கடத்தப்பட்ட மாணவியரை கண்டுபிடிக்கவும், அவர்களை மீட்கவும், சுமார் 80 இராணுவ வீரர்கள் நைஜீரியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சாட் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாணவியர் பத்திரமாக மீட்கப்படும் வரை, அமெரிக்க வீரர்கள் அங்கேயே இருப்பர் என்றும் அவர்கள் நைஜீரிய நிர்வாகம் மற்றும் பிற சர்வதேச நிர்வாகங்களுடன் இணைந்து, மாணவியர் மீட்கும் நடவடிக்கையில் இறங்குவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad