புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

சோனியா, ராகுலை பாதுகாக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒட்டுமொத்த ராஜினாமா?தேர்தல் தோல்விக்காக சோனியா மற்றும் ராகுலை குற்றம் சாட்டுவதிலிருந்து பாதுகாப்பதற்காக, காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யக்கூடும் என தகவல்
வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு தாங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதாக காங்கிரஸ் தலைவவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் முடிவு வெளியான அன்று அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் சோனியாவும், ராகுலும் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்ய முன்வரலாம் எனக் கூறப்படுகிறது. 

ஆனால் அப்படி இருவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தால், அவர்களது ராஜினாமாவை நிராகரித்து, தேர்தல் தோல்விக்கு அனைவருக்குமே பொறுப்பு உள்ளது என்று கூறி காரிய கமிட்டி உறுப்பினர்கள் அனைவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, காரிய கமிட்டியை மறு சீரமைக்க வேண்டும் என்று கூறலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக தேர்தல் தோல்விக்கு சோனியா மற்றும் ராகுலை நேரடியாக குற்றம் சாட்டுவதை தடுக்கும்விதமாகவும், அவர்களுக்கு எதிராக கலகக்குரல் எழாமல் பாதுகாப்பதற்காக காரிய கமிட்டி உறுப்பினர்கள் தயாராகி வருகிறார்கள். 

34 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டிதான், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் உயர்மட்டக் குழுவாகும். 

தேர்தல் தோல்விக்கு ராகுலை மட்டுமே குற்றம் சாட்டக்கூடாது என தொலைக்க்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத், உட்கட்சி ஜனநாயகம் ஒன்றே, கட்சியில் ஒருவரை வளர்த்துவிடும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறியுள்ளார். 

அதேப்போன்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி கூறுகையில், " சோனியா காந்தி, ராகுல் காந்தி ராஜினாமா என்ற கேள்வியே எழவில்லை. தோல்விக்கு அனைவருக்குமே கூட்டு பொறுப்பு உள்ளது. எனக்கும் கூட தோல்வியில் சமபங்கு உள்ளது" என்றார். 

இருப்பினும் தேர்தல் தோல்விக்கு ராகுலே காரணம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார் என்றால் அது முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார்தான். இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், " பிரசார நிர்வாகிகள் தவறு செய்துள்ளனர்.கட்சியை சோனியா தலைமையேற்று வழிநடத்த இதுவே சரியான தருணம்" என்றார். 
 

ad

ad