புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

ராஜினாமா முடிவை வற்புறுத்தப்போவதில்லை -துரைமுருகன்
ராஜினாமா முடிவை வற்புறுத்தப்போவதில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாகவும், தலைவர்கள், தொண்டர்கள் கோரிக்கையை அவர் ஏற்றுக்
கொண்டதாகவும் திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்வதாக வெளியான தகவலையடுத்து, அக்கட்சியினர் திமுக தலைவர் கலைஞர் இல்லத்தின் முன்பாகவும், மு.கஸ்டாலின் இல்லத்தின் முன்பாகவும் குவிந்தனர். அப்போது அவர்கள் ராஜினாமா செய்யக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர். 
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், 
சமீபத்தில் நடந்து முடிந்த நடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்ததைத் தொடர்ந்து, அதற்கு பொறுப்பேற்று தான் வகிக்கின்ற பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கலைஞரிடம், மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கலைஞர், அப்படியெல்லாம் செய்வதற்கு இது ஏற்ற நேரமும் அல்ல. அது தேவையும் இல்லை. கழகத்திற்கு நிறைய நீ (ஸ்டாலின்) பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஒரு தோல்வியால் கழகம் அழிந்துவிடக் கூடியது அல்ல. இது ஆண்டாண்டு காலத்திற்கு இருக்கக் கூடியது. பல தோல்விகளை கண்டிருப்பது. எனவே வருங்காலத்தில் இயக்கத்தை நடத்தக் கூடிய ஆற்றலை பெற்றிருக்கக் கூடிய நீர் (ஸ்டாலின்) என்று ஸ்டாலினிடம் தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின், தான் வகித்த பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியானதும், எங்களைப்போன்றவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி, அவரிடம் இத்தகைய முடிவை எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம். கலைஞரின் அறிவுரையை ஏற்றும், எங்களைப்போன்றவர்களின் கோரிக்கையை ஏற்றும், தான் ராஜினாமா முடிவை வற்புறுத்தப்போவதில்லை என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்வாறு துரைமுருகன் கூறினார். 

ad

ad