புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2014

இலங்கையில் இணையப் பாவனைக்கு தனி சிம்காட் 
இணைய பாவனைகளிற்கு தனியான சிம் அட்டைகளை பாவிப்பதன் மூலம் இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் பல்வேறு குற்றசெயல்களை தவிர்த்துக்கொள்ள முடியும்
என்றும்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் குறிப்பிடுகையில் இணைய பாவனைக்காக தனியான சிம் அட்டைகளை பயன்படுத்துமாறும், விசேடமாக இணையம் மூலம் வங்கி, மற்றும் முக்கிய சேவைகளில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.
 
மேலும் இது தொடர்பாக விபரங்களை கண்டறிய குற்ற புலனாய்வுத்துறை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான இணையத்தள குற்றங்கள் பற்றிய 235 முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளது அம்முறைப்பாடுகளில் 09 இணைய வங்கிகள் சம்பந்தப்பட்டதும் 34 முறைப்பாடுகள் மின்னஞ்சல் பொறிமுறை பற்றியதாகும் எனக் குறிப்பிட்டார்.

ad

ad