புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014

டோணியின் அதிரடியில் சென்னை வெற்றி 
பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
 
முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பெங்களூரு அணி கோலியின் அபார, அதிரடி அரைசதத்தின் மூலம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்கள் எடுத்து பெங்களூரை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஆட்டம் ஆரம்பம் முதல் சென்னை அணியின் வைன் ஸ்மித் மற்றும் டுபிளேசி அதிரடியாக ஆடினர். பவுண்டரிகளும் சிக்சர்களும் பறக்க 4.2 ஓவர்களில் 57 ஓட்டங்கள் விளாசப்பட்டது. 17 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சர் அடித்து 34 ஓட்டங்கள் விளாசிய வைன் ஸ்மித் ராம்பால் வீசிய பந்தை கோலி கையில் கொடுத்து வெளியேறினார்.
 
ரெய்னா 2 பவுண்டரிகளை மட்டுமே அடுத்தடுத்து அடித்தார். 18 ரன்கள் எடுத்த நிலையில் யுவ்ராஜ் பந்து வீச்சில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
 
9.3 ஓவர்களில் 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் டோணி களமிறங்கினார். 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் அவர் 28 பந்துகளில் 49 ஓட்டங்களுடனும். டுபிளேசி 54 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் நின்றனர்.
 
இதேவேளை, பெங்களூர் அணியின் துடுப்பாட்டம் முதல் 15 ஓவர்களில் 100 ரன்களையே எட்ட முடிந்தது. யுவராஜ் சிங் 25 ரன்கள் எடுத்து வெளியேற, கோலி 49 பந்துகளில் 2 பவுண்டரி 5 அற்புதமான சிக்சர்களை அடித்து 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலியின் அதிரடியினால் கடைசி 5 ஓவர்களில் 54 ஓட்டங்களே பெறப்பட்டன.
 
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக டோணி தேர்வு செய்யப்பட்டார்.
 
கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை பலமாக வீழ்த்தினால் மட்டுமே சென்னையைப் பின்னுக்குத் தள்ளி 2 வது இடத்திற்கு முன்னேற முடியும்.
 

ad

ad