புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014

ரஜரட்டவை வீழ்த்தியது யாழ்.பல்கலைக்கழக அணி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணிக்கும்  ரஜரட்ட பல்கலைக்கழக அணிக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 70 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 40 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 8 இலக்குகளை இழந்து  238 ஓட்டங்களைப் பெற்றது.
 
விதுஸ் இரண்டு ஆறுகள், ஆறு நான்குகள் அடங்கலாக 51 ஓட்டங்களையும், அச்சுதன் 46 ஓட்டங்களையும், சற்குணேஸ்வரன் 27 ஓட்டங்களையும், தனஞ்செயகுமார 25 ஓட்டங்களையும், பிரசங்கர் 24 ஓட்டங்களையும், யோகேஸ்வரன் 19 ஓட்டங்களையும் பெற்றார்கள்.
 
ரஜரட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், நயனஜித் ஆகியோர் தலா 3 இலக்குகளையும், குலதுங்க, அபா தலா ஒரு இலக்கையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரஜரட்ட பல்கலைகக்கழக அணி 38.4 பந்துப் பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது. ஹெட்டி ஆராச்சி ஐந்து நான்குகளுடன் 54 ஓட்டங்களையும், கருணசேனா 29 ஓட்டங்களையும், இலங்கசிங்க 21 ஓட்டங்களையும், குலதுங்க 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
யாழ்ப்பாண பல்கலைக் கழக அணியைச் சேர்ந்த  அச்சுதன் 5 இலக்குகளையும்  விதுஸ், வைகுந்தன் தலா 2 இலக்கு களையும் தசிந்தன் ஒரு இலக்கையும் கைப்பற்றினார் கள்.
போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக ரஜரட்ட பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஹெட்டி ஆராச்சியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அச்சுதன் சிறந்த பந்து வீச்சாளராகவும், சிறந்த களத்தடுப்பாளராக வைகுந்தனும், ஆட்ட நாயகனாக அச்சுதனும் விசேட துடுப்பாட்டப்பரிசை விதுஸும் பெற்றுக் கொண்டார்கள்.

ad

ad