புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2014

இலங்கையின் முதுகெலும்பாக வடமாகாணம் மாறியுள்ளது; மத்திய வங்கி ஆளுநர் 
வடமாகணத்தின் அபிவிருத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை ஊகுவித்தல் என்னும் தொனிப்பொருளில் வடமாகாண மத்திய வங்கி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் கலந்துரையாடல் ஒன்று
யாழ்.மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள எச்.என்.வி தலைமை காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது.
 
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிமால் கொப்ரல் கலந்து கொண்டு உரையாற்றினார்.
 
வட மாகாணம் முன்பு பின்தங்கிய ஒரு மாகாணமாக இருந்தது ஆனால் இன்று அவ்வாறு இல்லாது இலங்கையின் முதுகெலும்பாக மாறியுள்ளது. இவ்வாறான நிலைமைக்கு வட மாகாணம் உருவாவதற்கு சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலே பிரதான காரணமென்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிமால் கொப்ரல் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்-
 
எந்தவொரு நாட்டிலும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகம் பின்தங்கித்தான் உள்ளது அதற்கு இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல, இருப்பினும் மத்திய வங்கி இவ்வாறன வர்த்தகம் சார்ந்தபவர்களை இணங்கண்டு ஊக்குவிக்கவுள்ளது.
 
எனக்கு முன்பு உரையாற்றிய பேராசிரியர் முகுந்தன் சொன்னது போன்று நாங்கள் விவசாயத்தில் மட்டுமல்லாது புதிய கைத்தொழில் உற்பத்தி முயற்சிகளை மேற்கொண்டு அவற்றை சந்தை படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
 
பொதுவாக வடபகுதியில் உள்ள பனை வளத்தை கொண்டு உற்பத்தி செய்கின்ற பனம் பொருட்களின் உற்பத்தி தன்மையை அல்லது வடிவத்தை மாற்றவேண்டும் ஏன் என்றால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் உள்நாட்டு நுகர்வோரையும் கவரக்கூடிய வகையில் உற்பத்திசெய்ய வேண்டும் என்றார்.
 
மேலும் அவர் தெரிவிக்கையில் இலங்கையில் பாரிய முதலீடு ஒன்றினை மேற்கொண்டுள்ளோம் அதாவது 3 1/2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்து நாடு முழுவதிற்குமான உட்கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளோம்.
 
ஆனால் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகள் போதாது உள்ளது இவ்வாறு செய்யப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளிற்கு உரிய பலன் கிடைக்க வேண்டும் என்றால் உற்பத்தியினை பெருக்கி அதன் மூலமான வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 
மேலும் இலங்கை மத்திய வங்கி தன்னுடைய நோக்கத்தை மாற்றியுள்ளது, பிரதேச ரீதியான கைத்தொழில் அபிவிருத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம், அதனை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்றார்.
 
இன் நிகழ்விற்கு பேராசிரியர்கள் முகுந்தன், பாலசுந்தரம்பிள்ளை, வங்கி முகாமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ad

ad