புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


புலனாய்வுப் பிரிவினரால்  "தாருக நிலான்" என்னும் நபர் காட்டில் வைத்து சுடப்படுள்ளார் 
சமீபத்தில் குருணாகல் பகுதியில், போக்குவரத்து பொலிசார் ஒருவரை உயிரோடு பிடித்து பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்தார் தாருக நிலான் என்னும் இளைஞர். இவர் ஒரு குண்டர் படையின் தலைவர் என்றும், பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என்றும் பொலிசர் தெரிவித்தார்கள். 32 வயதான தாருக நிலானை பொலிஸ் சி.ஐ.டி பிரிவினர்
கடந்த வாரம் மடக்கிப் பிடித்தார்கள். இன் நிலையில், நேற்றைய தினம் அவர் தன்னிடம் ஒரு T 56 ரக துப்பாக்கி ஒன்று இருப்பதாகவும். தாம் அதனை காட்டில் புதைத்து வைத்திருப்பதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். எந்த இடத்தில் அது புதைக்கப்பட்டுள்ளது என்று காட்டுமாறு சி.ஐ.டி பிரிவினர் அவரை காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். மறைவான இடம் ஒன்றில் தாருக நிலான் தான் புதைத்துவைத்திருந்த துப்பாக்கியை வெளியே எடுத்து பொலிசாரிடம் கொடுத்துள்ளார்.

இதேவேளை அத்துப்பாக்கி புதைக்கப்பட்ட இடத்தில் கைக்குண்டு ஒன்றும் இருந்ததாகவும், துப்பாக்கியை பொலிசாரிடம் கொடுத்துவிட்டு அக் கைக்குண்டு எடுத்து தாருக நிலான் தம்மீது வீச எத்தணித்ததாகவும் பொலிசார் கூறி அவரை சரமாரியாக சுட்டுக்கொன்றுள்ளார்கள். இது மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு நடைபெற்றுள்ளது. தாருக நிலான் புதைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கொடுத்ததும், அவரை காட்டில் வைத்து அப்படியே போட்டுத்தள்ளவே சிங்கள சி.ஐ.டி பிரிவினர் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார்கள். அங்கே கைக் குண்டு ஒன்று இருந்ததாகவும் அதனை அவர் எடுத்து தம்மேல் வீச முற்பட்டதாகவும், பொலிசார் கூறுவது நம்பமுடியாத வகையில் உள்ளதாக கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். 

மொத்தத்தில் என்கவுண்டர் செய்யும் நோக்குடன் தான் தாருக நிலானை பொலிசார் அக்காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது. வடக்கில் இத்தனை கொலை புரிந்தவர்களுக்கு, இது எல்லாம் சர்வ சாதாரணம் !

ad

ad