புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014



அண்ணன் ரயில்வே மந்திரி!தம்பி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்! 



கர்நாடக முன்னாள் முதல் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான டி.வி.சதானந்த கவுடா, நரேந்திர மோடி அமைச்சரவையில் ரெயில்வே அமைச்சராக உள்ளார்.
அவரது தம்பியான சுரேஷ் கவுடா மங்களூருக்கு அருகிலுள்ள நந்திகூரில் உள்ள ரயில்வே நிலையத்தில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனது சகோதரர் குறித்து சுரேஷ் கூறுகையில், எனது சகோதரர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இது எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது. ஆனால் இதற்காக நான் எனது சகோதரரிடமிருந்து எந்தவொரு சலுகையயும் எதிர்பார்க்க மாட்டேன். ஏனெனில் அவர் எம்.எல்.ஏவாகவும் எம்.பியாகவும் முதலமைச்சராகவும் இருந்த போதும் கூட நான் அவரிடமிருந்து எந்தவொரு சலுகையையும் பெறவுமில்லை, எதிர்பார்க்கவும் இல்லை.

மோடி அமைச்சரவையில் அவர் இடம்பெறுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவருக்கு ரயில்வே இலாகா கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மட்டும் அவர் மேம்படுத்தினால் போதுமானது. என்று தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர் தேர்வுக்கான பரீட்சையை எழுதி அதல் தேர்வு பெற்று பணியில் சேர்ந்தவர் சுரேஷ் கவுடா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 1985ல் ஹுப்ளியில் உதவி ஸ்டேஷன் மாஸ்டராக பணியில் சேர்ந்தார். பிறகு அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பல ஊர்களில் அவர் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி உள்ளார்.

ad

ad