புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014


பெண்களிடம் பாலியல் லஞ்சம் கோரும் அதிகாரிகள்: சட்டத்தின் முன் நிறுத்துமாறு நிமல் சிறிபால டி சில்வா பணிப்பு
அரச காணிகள் வழங்கலின் போது ஆணைக்குழுவின் அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவிப் பெண்களிடம் பணத்திற்குப் பதிலாக பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளன. இவ்வாறு ஊவா மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் சாமர சம்பத் திசாநாயக்க தெரிவித்ததார்.
பதுளை மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் நேற்று பதுளை அரச செயலகத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே உறுப்பினர் சாமர சம்பத் திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில்
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகளது சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு தவறிழைத்திருப்போரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.
உறுப்பினர் சாமர சம்பத் திசாநாயக்க இங்கு மேலும் உரையாற்றுகையில்,
அரச காணிகள் வழங்கலில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருகின்றன. ஆணைக்குழுவின் அதிகாரிகளே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரச காணிகளை வழங்கும் போது முதலில் ஐம்பதாயிரம் ரூபா பணம் காணித் தேவையாளர்களிடமிருந்து பெறப்படுகின்றது. அதன் பின் அவரிடம் மேலும் ஐம்பதாயிரம் ரூபா பணம் பெற்று காணிக்குரிய உரிமைப்பத்திரங்களும் வழங்கப்படுகின்றன.
மேலும் பெண்களிடம் பணத்திற்குப் பதிலாக பாலியல் லஞ்சம் கோரப்பட்டுள்ளன. அப்பெண்களை தனியாக பதுளை மாநகரின் குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறும் அவர்களை காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகள் சிலரினால் அழைக்கப்பட்டனர்.
இது குறித்து முறைப்பாடுகள் எமக்கு வந்தவண்ணமுள்ளன.
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் பத்து பேருக்கு மேற்பட்டவர்களுக்கு அரச காணிகள் சொந்தமாக்கப்பட்டுள்ளன. இக் காணிகளில் நிருமாணிக்கப்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்புக்கள், குடிநீர் இணைப்புக்கள் ஆகியனவும் பெறப்பட்டிருக்கின்றன.
ஆகவே, இது போன்ற சட்டவிரோத செயல்பாடுகளினால் காணிகள் வழங்கப்பட்டமையை ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதுடன் உரியவர்களுக்கு காணிகள் கிடைப்பதற்கு வழி வகைகளைச் செய்ய வேண்டும்.
ஏற்கனவே இக் காணிகள் வழங்கப்படுகையில் இடம்பெற்ற பண லஞ்சம், பாலியல் லஞ்சம் ஆகியன தொடர்பாக தீவிரப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ளல் வேண்டும் என்றார்.

ad

ad