புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 மே, 2014

புலம்பெயர்ந்தோர் முதலீடுகள் யாழில் போதாது ; அரச அதிபர் கவலை 
 பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து
தொழில்முயற்சிகளை மேற்கொள்ளலாம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
 
 
வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த யாழ். அரச அதிபர்,
 
 
 
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் பெரிய அளவிலான முதலீடுகளுடன் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழல் யாழ்ப்பாணத்தில் நிலவுவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வெளிநாடுகளுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
 
இதேவேளை பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தொழில்முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் அதற்கான ஒத்துழைப்புகளையும் அமைவிடங்களையும் வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் குறித்த குழுவினரிடம் தான் தெரிவித்தாக யாழ்.அரச அதிபர் தெரிவித்தார். 

ad

ad