புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014

கனடிய ஒன்றாரியோ நெடுஞ்சாலைகளில் வேகத்தை அதிகரிக்கும்படி பரிந்துரை - 
ஒன்றாரியோவின் பெரும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை அதிகரிப்பது வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்கு பெரிதும் வழிவகுக்கும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது.
தற்போது 100 கிலோ மீற்றராகவிருக்கின்ற வேகத்தின் அளவினை 120 அல்லது 130 கிலோ மீற்றராக மாற்றும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட விடையம் சம்பந்தமாக வியாழக்கிழமை , கிட்டத்தட்ட 23,000 கையொப்பங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று தயாராகியிருப்பதாகவும் தெரிகிறது.
கைத்தொழில் மயமாக்கப்பட்டிருக்கின்ற நாடுகளில் கனடாவில் மட்டுமே குறைந்தளவு வேகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது எனவும், இத்தாலி, பெல்ஜியம், சுவிடன், மற்றும் அமெரிக்காவிலுள்ள ரெக்சஸ் பகுதிகள் ஆகிய இடங் களில் ஒன்றாரியோவிலும் பார்க்க அதிகளவில் வாகனங்களின் வேகங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிகிறது.
ஜேர்மனியில் 100,000 கார்களுக்கு மரணமடைபவர்கள் 4.7 சதவீதமாக இருக்கின்றது எனவும், கனடாவில் 100,000 கார்களுக்க 4.7 சதவீதமான மரணங்கள் நிகழ்கின்றன WHO என தெரிவிக்கின்றது.
ஓன்றாரியோவில் வருடாவருடம் 750,000 வாகனச் சாரதிகள் வேகமாக வாகனத்தைச் செலுத்தியமைக்காக ரிக்கட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிகிறது.
-

ad

ad