புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 மே, 2014

இலங்கைஅயர்லாந்தைவென்றது                                                                                                                                                                                       
                     
இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய முதலாது ஒருநாள் ஆட்டத்தில்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.   இதன் படி களமிறங்கிய இலங்கை அணி தனது (50)ஓவர்கள் நிறைவில் (8) விக்கெட்டுக்களை பறி கொடுத்து மிகவும் இக்கட்டான கட்டத்தில் அயர்லாந்து அணிக்கான வெற்றி இலக்காக (220) ஓட்டங்களை  நிர்ணயித்தது.
 
 இலங்கை அணி வீரர்களின் துடுப்பாட்டத்தை பொறுத்த வரையில் அதிகப்படியான ஓட்ட எண்ணிக்கையாக குலசேகரா (34)பந்துகளில் (2) சிக்ஸர்கள் அடங்களாக (42) ஓட்டங்களை பெற்றுகொடுத்திருந்தார்.பந்து வீச்சு மட்டுமல்லாது இன்றைய ஆட்டத்தில் துடுப்பாட்டத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார் குலசேகரா.                                                       
ஷண்டிமல் (61)பந்துகளில் (39) ஓட்டங்களையும்...மத்தியூஷ் (52) பந்துகளில் (30)ஓட்டங்களையும் தமது சார்பில் அணிக்காக பெற்றுக்கொடுத்திருந்தனர்.
 
                                                         
 
இன்றைய ஆட்டத்தில் அயர்லாந்து வீரர்களின் பந்து வீச்சு சிறப்பான முறையில் அமைந்து இருந்ததை காணமுடிந்தது.பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில் குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் ஒரு விக்கெட்டுகளையேனும்  வீழ்த்த தவறவில்லை என்று தான் குறிப்பிட வேண்டும்.
 
 
பதிலுக்கு (220)என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தமது விக்கெட்டுக்களை பறிகொடுக்க தொடங்கினர்.
இதன் படி அயர்லாந்து அணி (39.5) ஓவர்கள் முடிவில் தனது சகல விக்கெட்டுக்களையும் இழந்து (140) ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
 
 
இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் பெரிதாக பிரகாசிக்காது விட்டாலும்  பந்து வீச்சின் மூலம்  வெற்றியை உறுதி செய்தனர். 
இதனூடாக  இலங்கை அணி தனது முதலாவது ஒரு நாள் வெற்றியை (79) ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்றுக்கொண்டுள்ளது.
 

ad

ad