புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014

நல்லிணக்க முயற்சிகளுக்கு வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் உதவப்போவதில்லை- கனடா
அரசாங்கம் முன்னெடுக்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

இலங்கைய அரசாங்கத்தின் 5ம் ஆண்டு போர் வெற்றி நிகழ்வைப் புறக்கணித்ததை கனடா அரசாங்கம், உறுதி செய்துள்ளது.போர் வெற்றி நிகழ்வை கனடா புறக்கணித்ததாக இலங்கைக்கான கனடா தூதுவர் ஷெல்லி வைற்றிங் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

.இந்தநிலையில், கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் அதனை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

அரசாங்கத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களை கடந்த வருடங்களிலும் கனடா புறக்கணித்தது எனத் தெரிவித்த கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட், இதற்கான காரணத்தை கொழும்பிலுள்ள கனடிய தூதுவர் ஷெல்லி வைட்டிங் உள்ளுர் ஊடகங்களுக்கு விளக்கியிருப்பதாகவும்,

தற்போதைய நிலையில் இலங்கைக்கு தேவையாக இருப்பது நல்லிணக்க முயற்சிகளே எனத் தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர், அதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் உதவப்போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எச்சரிக்கை 

ad

ad