புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014


உள்­ளகப் பொறி­முறைப் பொறிக்குள் வீழ்த்­தப்­படும் இலங்கை அரசு
இலங்­கையில் போரின் போது நடந்த மீறல்கள் குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்­கான, சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் ஜெனீவாவில் தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில், உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றைக்கு ஊக்­க­ம­ளிக்கும் அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு அதி­க­ரித்து வரு­கி­றது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில், இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தை முன்­வைக்க அமெ­ரிக்கா தயா­ரான போது, அதற்கு உற்­சாகம் கொடுக்கும் வகையில், அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தில் ஒரு தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்­டது.
அது சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஆத­ரவு தெரி­விக்கும் தீர்­மானம்.
அதை­ய­டுத்து, இலங்கை அர­சாங்­கத்தின் முயற்­சி­யினால், இன்­னொரு தீர்­மா­னமும் அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டது.
அமைச்சர் பஸில் ராஜபக்சவும், வொஷிங்­டனில் இருக்கும், இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்­கி­ர­ம­சூ­ரி­யவும் இணைந்து மேற்­கொண்ட முயற்­சி­யினால் தான், இந்த இரண்­டா­வது தீர்­மானம் முன்­வைக்­கப்­பட்­டது.
இந்த 364வது இலக்கத் தீர்­மானம், மனி­த­ உ­ரி­மைகள், ஜன­நா­ய­கத்­துக்கு மதிப்­ப­ளிக்கும் வகை­யிலும், அமெ­ரிக்­கா­வி­னது பொரு­ளா­தார மற்றும் பாது­காப்பு நலன்­களைப் பிர­தி­ப­லிக்கும் வகை­யிலும், இலங்கை தொடர்­பான கொள்­கையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவைக் கோரு­கி­றது.
அத்­துடன் “உள்­நாட்டுப் போரின் போது, இரு­த­ரப்­பி­னதும் நட­வ­டிக்­கை­களால், ஏற்­பட்ட மனக்­கு­றை­க­ளுக்கு உள்­நாட்டுப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்கித் தீர்­வு­காண சர்­வ­தேச சமூ­கத்­துடன் இணைந்து அமெ­ரிக்கா, உதவ வேண்டும்.
தென்­னா­பி­ரிக்கா போன்று உண்மை நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைக்க இலங்­கையை ஊக்­கு­விக்க வேண்டும்.
மத மற்றும் ஊடக சுதந்­தி­ரத்தை இலங் கை உறு­திப்­ப­டுத்தி, ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் மத தலங்கள் மீதான தாக்­கு­தல்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்கள் நீதியின் முன் நிறுத்­தப்­பட வேண்டும்” என்­றெல்லாம் இந்த தீர்­மானம் கோரு­கி­றது.
சாதா­ர­ண­மாக இதனை இலங்கை அர­சுக்கு ஆத­ர­வான தீர்­மானம் என்று கூற முனைந்­தாலும், ஒரு வகையில் இதுவும் கூட இலங்கை அர­சாங்­கத்­துக்­கான ஒரு பொறி தான் என்­பதை நுணுக்­க­மாகப் பார்க்கும் போது புரிந்­து­கொள்ள முடியும்.
ஆரம்­பத்தில் இந்த தீர்­மா­னத்­துக்கு 11 உறுப்­பி­னர்­களே ஆத­ர­வ­ளித்­தி­ருந்­தனர். ஆனால், கடந்த மாத இறு­தியில் இந்த எண்­ணிக்கை 17 ஆக அதி­க­ரித்­தது. இம்­மாதம் முதலாம் திகதி மேலும் ஒன்­பது செனட்­டர்­களின் ஆத­ரவு கிடைத்­ததை அடுத்து, தற்­போது 26 அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைப் பெற்­றுள்­ளது.
இந்தத் தீர்­மானம் அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற வெளி­வி­வ­காரக் குழுவின் பரி­சீ­ல­னைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்­ன­தாக, முன்­வைக்­கப்­பட்ட சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஆத­ர­வான தீர்­மா­னமும் தற்­போது, வெளி­வி­வ­காரக் குழுவின் பரி­சீ­ல­னை­யி­லேயே உள்­ளது. ஆனால், அந்த தீர்­மா­னத்­துக்கு புதி­தாக ஆத­ரவு கிடைக்­க­வில்லை.
உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றைக்கு ஆத­ரவு தேடும் வகையில், இலங்கை அர­சாங்­கத்தின் தூண்­டு­தலால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள தீர்­மா­னத்­துக்கு, அதி­க­ரித்து வரும் ஆத­ரவு குறித்து ஆங்­கில ஊட­கங்­களில் முழுப்­பக்க விளம்­ப­ரங்கள் எல்லாம் வெளி­யா­வதைக் காண­மு­டி­கி­றது.
இந்தத் தீர்­மானம், வெளி­வி­வ­காரக் குழு­வினால், நாடா­ளு­மன்ற விவா­தத்­துக்­காக அனுப்பி வைக்­கப்­பட்டு, அது ஏற்றுக் கொள்­ளப்­ப­டு­வ­தற்கு 54 சதவீத வாய்ப்­புகள் இருப்­ப­தாக அமெ­ரிக்க காங்­கி­ரஸின் அதி­கா­ர­பூர்வ தக­வல்கள் கூறு­கின்­றன. உள்­ளக விசா­ர­ணைக்கு ஆத­ரவு வழங்கக் கோரும் இந்த தீர்­மானம் இலங்கை அர­சுக்கு முற்­றிலும் சார்­பா­னது என்று கூற­மு­டி­யாது. அதி­லுள்ள ஒரே சார்­பான விடயம், உள்­ளக விசா­ர­ணைக்கு உதவ வேண்டும் என்­பது மட்டும் தான். அதுவும் கூட எந்­த­ள­வுக்கு இலங்கை அர­சுக்கு கைகொ­டுக்­கத்­தக்­கது என்­பது சந்­தேகம் தான்.
ஏனென்றால், சர்­வ­தேச விசா­ரணை என்ற அமெ­ரிக்க அரசின் முயற்­சியை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே, உள்­ளக விசா­ரணை என்­பதை வலி­யு­றுத்தும் தீர்­மா­னத்தைக் கொண்­டு­வர இலங்கை அர­சாங்கம் பின்­புல ஆத­ரவை வழங்­கி­யது.
ஜெனீவாவில் சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்­து­வ­தற்கு ஐ.நா. மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­துக்கு, அதி­கா­ர­ம­ ளிக்கும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு விட்ட நிலையில், இப்­போது இலங்கை அர­சாங்கம் இரண்டு விட­யங்­க­ளுக்குத் தயா­ராக இல்லை. முத­லா­வது, ஐ.நா மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­தினால் மேற்­கொள்­ளப்­படும், விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தில்லை.
போரின் இறு­திக்­கட்­டத்தில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்­பாக உள்­ளக விசா­ர­ணைகள் ஏதும் நடத்தத் தேவை­யில் லை என்­பது இரண்­டா­வது.
ஜெனீவா தீர்­மா­னத்தின் போது, நடு­நிலை வகித்த சில நாடுகள் இந்த இரண்­டையும் வலி­யு­றுத்­து­வ­தாகத் தக­வல்கள் கூறு­கின்­றன. தென்­னா­பி­ரிக்கா, இந்­தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இவற்றில் முக்­கி­ய­மா­னவை. இந்த இரண்­டையும் நிறை­வேற்­று­வதன் மூலமே சர்­வ­தேச அழுத்­தங்­களைக் குறைத்துக் கொள்­ளலாம் என்று, இந்த நாடுகள் ஆலோ­சனை கூறி­யுள்­ள­தாகத் தெரி­கி­றது.
ஆனால், இலங்கை அர­சாங்­கமோ இந்த இரண்­டுக்கும் தயா­ராக இல்லை என்றே கூறப்­ப­டு­கி­றது. ஐ.நா. மனி­த­ உ­ரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்­பது என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச கூறி­விட்டார்.
அதே­வேளை, அமெ­ரிக்க காங்­கி­ரஸில், உள்­ளக விசா­ர­ணை­களை வலி­யு­றுத்தி, கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னத்­துக்குப் பின்­பு­லத்தில் இருந்த இலங்கை அர­சாங்கம், இப்­போது சுதந்­தி­ர­மான உள்­ளக விசா­ர­ணை­களை நடத்­தவும் தயா­ராக இல்லை.
ஆரம்­பத்தில் இருந்தே, அர­சாங்கம் எந்தப் போர்க்­குற்­றங்­களோ, மீறல்­களோ நிக­ழ­வில்லை என்று கூறி­வந்­துள்­ளது. அதை­விட, ஏற்­க­னவே இரா­ணுவ நீதிமன்றம் ஒன்று நிறு­வப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதால், அதுவே போதும் என்று அரச உயர்­மட்டம் கரு­து­வ­தா­கக் கூறப்­ப­டு­கி­றது.
மேஜர் ஜெனரல் கிரி­சாந்த டி சில்வா தலை­மை­யி­லான இந்த இரா­ணுவ நீதி­மன்றம், முதற்­கட்­ட­மாக, படை­யினர் திட்­ட­ மிட்ட வகையில் பொது­மக்­களைத் தாக்­க­வில்லை, என்று அறிக்கை ஒன்றைக் கொடுத்­தி­ருந்­தது.
இரண்­டா­வது கட்­ட­மாக, சனல்-4  வெளி­யிட்ட போர்க்­குற்ற வீடியோ தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­ப­டு­வ­தாக அறி­வித்து ஒன்­றரை ஆண்­டு­க­ளாக அந்த விசா­ர­ணைகள் நீள்­கின்­றன. ஆனால், இரண்­டா­வது கட்ட அறிக்­கையை அந்த இரா­ணுவ நீதி­மன்றம் இன்­னமும் கைய­ளிக்­க­வே­யில்லை.
அதற்­கி­டையில், இந்த இரா­ணுவ நீதி­மன்­றத்தின் தலை­வ­ரான மேஜர் ஜெனரல் கிரி­சாந்த டி சில்­வாவை, அடுத்­த­மாதம் வெளி­நாடு ஒன்றில் இரா­ஜ­தந்­திரப் பத­விக்கு அமர்த்த அர­சாங்கம் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.
இதேவேளை, இந்த அறிக்கை கையளிக்கப்படுமா அல்லது அது அப்படியே மறக்கப்பட்டு விடுமா என்றும் தெரியவில்லை.
இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க காங்கிரஸில் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளக விசாரணையை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் கூட இலங்கை அரசுக்கான அமெரிக்காவின் அழுத்தங்கள் குறையப் போவதில்லை.
ஏனென்றால், உள்ளக விசாரணை தவிர, மற்றெல்லா விடயங்களிலும், தற்போதைய அரசு கொண்டுள்ள அணுகுமுறையையே அந்த தீர்மானமும் வலியுறுத்துகிறது.
எனவே, அமெரிக்க காங்கிரஸில் இந்த தீர்மானம் வலுப்பெற்று வருவது கூட இலங்கைக்கு பொறியாகவே அமையுமே தவிர பலமாக இருக்காது.
சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதை என்று கூறுப்படுமே, அது போலத்தான் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமும், சிக்கிக் கொள்ளலாம்.
கபில்

ad

ad