புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2014


அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு அமைச்சர் பதவி வழங்காதது ஏன்?
நரேந்திரமோடி நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 45 மந்திரிகளும் பதவி ஏற்றார்கள். இவர்களில் 23 பேர் கேபினட் மந்திரிகள், 10 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 12 பேர் ராஜாங்க மந்திரிகள்.



பா.ஜனதா தலைவர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, உமாபாரதி, மேனகா காந்தி, ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷ்வர்தன் ஆகியோர் கேபினட் அந்தஸ்து மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு மந்திரி பதவி அளிக்கப்படவில்லை. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், வாரிசுகள், குற்ற வழக்குகள் உள்ளவர்களுக்கு மந்திரி பதவி இல்லை என்று பா.ஜனதா உயர்மட்டக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.
அந்த வகையில் 83 வயதாகும் அத்வானி, 80 வயதாகும் ஜோஷி ஆகியோருக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை. இமாச்சல பிரதேச முன்னாள் முதல்– மந்திரி துமில் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் தங்களது மகன்களுக்கும் மந்திரி பதவி கேட்டு இருந்தனர். ஆனால், வாரிசுகளுக்கு இடம் இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டதால் அவர் களது வாரிசுகளுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.
தேர்தலில் தோற்ற அருண் ஜெட்லி, ஸ்மிரிதி இரானி ஆகியோருக்கு மந்திரி பதவி கிடைத்துள்ளது. அருண் ஜெட்லி அமிர்தசரஸ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கேப்டன் அம்ரிந்தர்சிங்கிடம் தோற்றார். திறமையின் அடிப்படையில் அருண் ஜெட்லிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டதுடன் அவருக்கு நெருக்கடி கொடுத்து வாக்கு வித்தியாசத்தையும் குறைத்தார். இதனால் அவரை கவுரவப்படுத்தும் வகையில் மந்திரியாக நியமித்து இருக்கிறார்.
45 மந்திரிகளில் 7 பேர் பெண்கள். இவர்களில் சுஷ்மா சுவராஜ், உமாபாரதி, நஷ்மா ஹெப்துல்லா, மேனகா காந்தி, ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஸ்மிரிதி இரானி ஆகிய 6 பேர் கேபினட் மந்திரிகள், நிர்மலா சீதாராமன் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடி மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மந்திரி நஜ்மா ஹெப்துல்லா. இவர் முன்பு காங்கிரஸ் ஆட்சியில் டெல்லி மேல்– சபை துணைத் தலைவராக பணியாற்றியவர். பின்னர் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

பெண் மந்திரிகளில் வயது மூத்தவரும் நஷ்மா ஹெப்துல்லாதான். அவருக்கு வயது 78 ஆகிறது. பெண்களில் மிகவும் வயது குறைந்தவர் ஸ்மிரிதி இரானி. முன்னாள் டி.வி.நடிகை மாடல் அழகியான இவருக்கு வயது 38.

ad

ad