www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

திங்கள், மே 26, 2014


டில்லியில் ராஜபக்ச வருகைக்கு  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வை கோ வும் தொண்டர்களும் கைது 
இலங்கை அதிபர் ராஜபக்ச வருகையை கண்டித்து டெல்லியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்ச இன்று காலை டெல்லி வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பேசிய வைகோ, இன்று மகிழ்ச்சியும், பெரும் துக்கமும் நிறைந்த ஒரு முக்கியமான நாள். பெரும் பெற்றி பெற்று இந்தியாவின் 15வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு நாளும், இந்திய தமிழர்களின் இதயத்தில் ஈட்டியாய் குத்திக்காயம் ஏற்பட்ட நாளுமாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நரேந்திர மோடி யாருடைய தயவும் தேவையின்றி 272 இடங்களுக்கு மேல் பெற்று இந்திய பிரதமராவார் என்று நான் ஜனவரி மாதத்திலேயே குறிப்பிட்டேன். அதுதான் இப்போது நடந்துள்ளது.
இந்த வெற்றிக்கும், பிரதமராகும் மோடிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம் இந்த பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்ச அழைக்கப்பட்டிருப்பதை ம.தி.மு.க சார்பிலும் மற்றும் ஈழத் தமிழர்களின் சார்பிலும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜபக்ச ஒரு இனத்தையே கூண்டோடு அழித்த மகாபாவி. இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை, குழந்தைகளை ஈவு இரக்கமின்றி தனது படைகள் மூலம் கொன்று குவித்த இனப்படுகொலையாளி. அத்தகையை கொடூரமான ராஜபக்சவை இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பது தமிழர்களின் மனதை வேதனைப்படுத்தியுள்ளது.
மோடி பிரதமராக பதவியேற்கும் இந்த நேரம் ஈழத்தமிழர்களின் வாழ்வில் முக்கியமான நேரமும், அவசியமான நேரமும் கூட. இதை மோடி புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
இதைத் தொடர்ந்து கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.