புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014

ஆட்சியைக் கைப்பற்ற யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்: பா.ஜனதா அறிவிப்பு
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரும், உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளருமான அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும்,
எந்த கட்சியின் ஆதரவையும் ஏற்க பா.ஜனதா தயாராக உள்ளது.

272–க்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற இலக்குடன் போட்டியிட்டோம். அது கிடைக்கப்போகிறது. இருப்பினும், ஒரே ஒரு எம்.பி.யை கொண்ட கட்சியாக இருந்தாலும், எங்களை ஆதரிக்க விரும்பினால், தேச நலன்கருதி அதை ஏற்றுக்கொள்வோம். பா.ஜனதா கூட்டணிக்கு 290 முதல் 305 இடங்கள் வரை கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 50 முதல் 55 இடங்கள் கிடைக்கும்.
இந்த தேர்தல் முழுவதும் பா.ஜனதாவுக்கு சாதகமாகவே அமைந்தது. இது, நரேந்திரமோடியின் வெற்றி, பா.ஜனதாவின் வெற்றி. இவ்வாறு அமித் ஷா கூறினார்.

ad

ad