புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014




டந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலில் எப்பாடு பட்டாவது வெற்றி பெறும் முயற்சியில் தமிழகம் முழு வதும் பணத்தை வாரியிறைத்திருந்தது அ.தி.மு.க. "பணத்தை கொடுத்தாகிவிட்டது வெற்றி நமக்குத்தான்' என்ற நினைப்பில் ஜெ. கொடநாடு போக, ""அம்மா... நீங்க மோசம் போயீட்டீங்க. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு மட்டும் நீங்கள் அனுப்பியது ரூ. 6 கோடியே 25 லட்சம்.  வாக்காளர்களுக்கு கிடைத்தது ரூ.60 லட்சம்.  மீதம் எங்கே? யார், யாருக்கு எவ்வளவு போனது என்ற பட்டி யலையும் அனுப்பி யுள்ளேன். இவங்களை சீக்கிரம் கண்டிங்க. விட்டால் கட்சியையே விலை பேசி வித்துடுவாங்க'' என்று போயஸ் தோட்டத்திற்கும், அதன் நகலை தூத்துக்குடி மாவட்டச் செயலாளருக்கும், தூத்துக்குடி சட்ட மன்ற உறுப்பினருக்கும்  நிர்வாகிகள் சிலர் அனுப்ப... கதிகலங்கியுள்ளனர் தூத்துக்குடி மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.

""தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும், ரூ.200 வீதம் குறைந்தபட்சம் 75 சதவிகித வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக 10 பூத்துகளுக்கு ஒரு மண்டலத் தலைவர் வீதம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தமுள்ள 249 பூத்துகளுக்கும் சேர்த்து ஒரு தலைவர், 2 உறுப்பினர்கள் கொண்ட 23 மண்டல தேர்தல் பணிக்குழுக்களை நியமித்தனர் சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லபாண்டியனும் மற்றும் நகர செயலாளர் ஏசாதுரையும். 


பூத்திற்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் வீதம் 249 பூத்களுக்கும் மண்டலத் தேர்தல் பணிக் குழுக்களைக் கொண்டு வாக்காளர்களுக்கு கொடுப்பது இவர்களின் திட்டம். வாக்காளர் களுக்கு கொடுப்பதற்காக இருந்த  ரூ. 6 கோடியே 25 லட்சத்தில் எம்.எல்.ஏ. சி.த.செல்லபாண்டியன் தன் பங்காக 5 சதவீதமும், நகர செயலாளர் ஏசாதுரை தன் பங்காக 10 சதவீதமும் எடுத்துக் கொண்டு  மீதமுள்ள பணத்தையே ஏப்.22 முதல் 23 மதியம் 2 மணி வரை காரியாலயத்திலும், ராஜ் ஹோட்டலிலும் வைத்துக் கொடுத் துள்ளதாகக் கணக்குக் காட்டியுள்ளனர். ஆனால், அந்த பணம்கூட மேலிருந்து கீழிறங்கவில்லை. சி.த.செல்லபாண்டி யனும், ஏசாதுரையும் தங்களுக்கு வேண்டியவர்களைப் பார்த்து மண்டல தேர்தல் குழுவில் போட்டு, பிரச்சினைக் குரிய இடத்திற்கு மட்டும் பணத்தைக் கொடுத்துவிட்டு மொத்தப் பணத்தை யும் சுருட்டியுள்ளனர். 

அடிமட்டத் தொண்டர்களுக்கு எதுவும் கிடைக்கலை. அதுவும் அவனுக்கே தெரியாமல், அவன் வாக்கையும் விலை பேசி வாங்கிவிட்டார்கள்.  அதன் வெளிப்பாடுதான் அம்மாவிற்கு புகார் கடிதங்கள்'' என நமக்கு விளக்கம் கொடுத்தார் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

தூத்துக்குடி 33-வது வார்டு வட்டச் செயலாளர் சக்திவேல் கட்சி தலைமைக்கு எழுதிய கடிதம் நமக்கு கிடைக்க, அவரிடம் கேட்டோம். ""நான் வேலை பார்த்த 4 பாகத்திற்கும் சேர்த்து மொத்தம் என் பெயரில் வரவு வைச்சது ரூ.7 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய். என் கைக்கு கிடைச்சது வெறும் 30 ஆயிரம் ரூபாய். மிச்சம் எங்கே..? அதைத்தான் கடிதத்திலே கேட்டிருக் கிறேன். நான் யாரையும் குறை சொல்லலை. சொல்லவும் மாட்டேன். ஒவ்வொருத்தனும் பணத்தை வாங்கிட்டு தன்னை மட்டுமே பார்த்துக்குறான். கட்சிக்கு என்று என்ன செய்திருக்கிறான். முடிஞ்சவரைக்கும் சுருட்டு றான். என்னைப் பொறுத்தவரை, தூத்துக்குடி யில் அ.தி.மு.க. ஜெயிக்கிறது கஷ்டமான விஷயம்தான். அம்மாவை இவங்க ஏமாத்து வதை என்னால் தாங்கிக்க முடியலை. அதனால் தான் இந்த கடிதமே'' என்றவர், ""தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியிலேயே அதிகளவு பணம் ஒதுக்கப்பட்டது மண்டல தேர்தல் பணிக்குழு தலைவர் ஜெ.கோகிலா ஜெய முருகனுக்கே. இவருக்கு ஒதுக்கப்பட்ட பாகம் எண்கள்: 1, 2, 3, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. இவருக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படும் தொகை ரூ.27,50,000. மொத்த பணத்தையும், யாருக்கும் கொடுக்காமல்  எம்.எல்.ஏ., நகர செயலாளர், ஜெ.கோகிலா ஜெயமுருகன் என  3 பாகமாக பிரித்து பங்கிட்டுக்கொண்டார்கள். எல்லோரையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுதான் என் னுடைய வேலை. இது மாதிரி கடிதங்கள் தொடரும்'' என்று கூறி நம்மை அதிரவைத்தார்.  இந்த கடி தம் பரவுவதற்கு முன்னதாக அமைச் சர் சண்முகநாதனிடம் 27-வது வட்ட நிர்வாகிகள், ""தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கவுன்சிலர் ஆர்.வீரபாகு அமுக்கி விட்டார் நடவடிக்கை எடுங்கள்'' என்றிருக்கின்றனர். அவரும் விசா ரித்து தகவல் சொல்வதாக அவர் களை அனுப்பியுள்ளார். அதற்குப் பிறகே இந்த அதிர்வுக் கடிதங்கள்.

இது பற்றி கருத்தறிய நகர செயலாளர் ஏசாதுரையை தொடர்பு கொண்டோம். எந்த பதிலும் இல்லை. கடிதம் கலக்கிய கலக்கலில் திடீரென்று மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். எம்.எல்.ஏ. சி.த. செல்லபாண்டியனோ, ""நான் இப்ப ஹாஸ்பிட்டலில் இருக்கிறேன். எனக்கு எந்த கடிதமும் வரலை. எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. பிறகு விரிவாக பேசுகிறேன்'' என லைனை கட் செய்தவர் அடுத்த வினாடிகளுக்குள் மீண்டும் லைனுக்கு வந்து, ""செலவு பண்ணாதவங்க காசை திருப்பிக் கொடுத்திட்டிருக்காங்க. இப்போதைக்கு எழுதி பெரிசுபடுத்தாதீக'' என வேண்டு கோளையும் வைத்தார். அமைச்சர் சண்முகநாதனையும் தொடர்புகொண்டோம். இதழ் அச்சேறும் வரை எந்தப் பதிலும் வரவில்லை.

ad

ad