புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014


சர்வதேச விசாரணை ஒத்துழைக்குமாறு மகிந்தவிடம் மோடி கோர வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை-பி பி சி தமிழ் 
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஐ நா சர்வதேசக் குழுவின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்குமாறு, நரேந்திர மோடி மஹிந்த ராஜபக்ஷவிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்குபெற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி வரும்போதே இந்தப் பரிந்துரை செய்யப்பட வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பான மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் ஆனாலும், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பானவர்கள் இதுவரை நீதியின் முன்னர் நிறுத்தப்படவில்லை என்று அந்த அமைப்பின் இந்தியாவுக்கான இயக்குநர் சஷிகுமார் வேலத் தெரிவித்துளார்.
போர் குற்றங்கள் மற்றும் இதர குற்றங்களை புரிந்தார்கள் எனும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்க இலங்கை தவறிவிட்டது என்றும் அவர் கூறுகிறார்.
கடந்த மார்ச் மாதம், இலங்கை ஒரு சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை உள்நாட்டு போரில் இரண்டு தரப்பினராலும் புரியப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பில், ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் விரிவான விசாரணைகளை நடத்தவேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கோரப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஐநாவின் விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று இலங்கை அரசாங்கம் இந்த மே மாதம் முன்னதாக அறிவித்திருந்தது

ad

ad