புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2014

ஜனாதிபதியின் செயலாளருடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் : சுமந்திரன் எம்.பி

போர்க்­குற்றம் தொடர்­பி­லான சர்­வ­தேச விசா­ரணை தவிர ஏனைய அனைத்துப் பரிந்­து­ரை­க­ளையும் அர­சாங்கம் நிறை­வேற்றத் தயார் என்­பது உண்­மை­யாயின், இம்­மாத இறு­திக்குள் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். வாக்­கு­றுதி கொடுப்­ப­தை­விட செயலில் காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.
 
நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகளை சிறி­த­ள­வேனும் அமுல்­ப­டுத்­த­வில்லை. இது தொடர்பில் ஜனா­தி­பதியின் செய­லா­ள­ருடன் பகி­ரங்க விவா­தத்­திற்கு நான் தயார் எனவும் அவர் குறிப்­பிட்டார்.
 
சர்­வ­தேச விசா­ர­ணையினை தவிர அனை த்து பரிந்­து­ரை­க­ளையும் நிறை­வேற்றத் தயார் என்ற ஜனா­தி­ப­தியின் கருத்து தொட ர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு
கருத்துத் தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
 
ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் தீர்­மா­னங்­களின் சர்­வ­தேச விசா­ரணை தவிர்த்து ஏனைய பரிந்­து­ரை­களை நிறை­வேற்றத் தயார் என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். சர்­வ­தேச விசா­ர­ணை­களைத் தவிர மிக முக்­கி­ய­மான விட­யங்­க­ளாக வடக்கில் இருந்து இரா­ணு­வத்தைக் குறைக்க வேண்டும். தனியார் காணி­களை பொது­மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்க வேண்டும். மீள் குடி­யேற்­றத்­தினை மேற்­கொள்ள வேண்டும். வட மாகாண சபைக்­கான அனைத்து அதி­கா­ரங்­களும் வழங்­கப்­படல் வேண்டும் ஆகி­யவை உள்­ள­டங்களாக பல விடங்கள் அமைந்துள்ளன. இவ்­வி­ட­யங்­களினால் வட மாகாண தமிழ் மக்கள் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.
 
அதேபோல் அர­சாங்கம் தீர்­வினை எய்­து­வ­தற்­கான எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தை­யி­னையும் எம்­முடன் மேற்­கொள்ள விரும்­ப­வில்லை. இது தொடர்­பிலும் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. எனவே, இவை தொடர்பில் யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து ஆண்­டு­க­ளாக அர­சாங்கம் எந்தவித முன்­னெ­டுப்புக்களையும் மேற்கொள்ளாது இப்­போது சர்வதேச விசாரணையைத் தவிர ஏனைய அனைத்தையும் மேற்கொள்ள முடியும் என்று ஜப்பான் அமைச்­ச­ரிடம் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார்.
 
கடந்த காலங்­களில் அர­சாங்கம் ஐ.நா. பரிந்­து­ரைகள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்துரைகளுக்கு எதி­ரா­கவே அனைத்து செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்­தது. வடக்கில் காணி அப­க­ரிப்பு, இரா­ணுவ குவிப்பு, பெண்கள் மீதான அடக்கு முறைகள் மற்றும் வட மாகாண சபை தேர்­தலை நடத்­தி­னாலும் இன்­னமும் அடக்கு முறைக்­குள்­ளேயே வைத்­திருப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. எனவே, சர்­வ­தே­சத்­திடம் பொய்­யான வாக்­கு­று­தி­களை கொடுத்து காலத்தைக் கடத்­தி­யது போதும். இப்­போதும் அனைத்­தையும் செய்வோம் எனக்­கூறி கதைத்துக் கொண்­டி­ருக்­காமல் செயலில் காட்ட வேண்டும். ஜனா­தி­பதி ஜப்­பா­னிய அமைச்­ச­ரிடம் குறிப்­பிட்­டது அனைத்தும் உண்­மை­யெனின் இம்­மாத இறு­திக்குள் அனைத்­தையும் செயற்­ப­டுத்திக் காட்ட வேண்டும்.
 
மேலும், நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் 70 வீத­மா­னவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது. ஆணைக்­கு­ழுவின் செய­லணிக் குழுத்­த­லைவர் லலித் வீர­துங்­கவே இதனை குறிப்­பிட்டு வரு­கின்றார். ஆனால், உண்­மை­யி­லேயே நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் 20 வீத­மேனும் செய­லாக்­கப்­ப­ட­வில்லை. இன்றும் வடக்கில் அனைத்து செயற்பாடுகளிலும் கட்டுப்பாடுகளே விதிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவுடன் பகிரங்க விவாதத்தை நடத்த நான் தயாராகவே உள்ளேன். ஆதாரமிருப்பின் செயற்படுத்திய திட்டங்களை லலித் வீரதுங்க காண்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
 

ad

ad