புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மே, 2014


செல்போன்களில் ஜெயலலிதாவின் நன்றி அறிவிப்பு பேச்சு

தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் ஏராளமான செல்போன்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நன்றி அறிவிப்பு பேச்சு அழைப்பு வருகிறது.


பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரிரு நாளுக்கு முன்னதாக, ‘‘நாட்டின் முன்னேற்றத்துக்கும், அமைதி, வளம், வளர்ச்சிக்கும் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். செய்வீர்களா..., நீங்கள் செய்வீர்களா...? என்று வாக்காளர்களின் செல்போனுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல் பதிவு அழைப்புகள் வந்தன.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றியை பெற்றத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அபரிமிதமான ஆதரவை அளித்துள்ள தமிழக வாக்காளர்களுக்கு நன்றி கூறும் விதமாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் குரல் பதிவு குறுஞ்செய்தி அழைப்பு தேர்தல் முடிவு வெளியாக தொடங்கிய சில மணி நேரங்களில் இருந்தே பல லட்சம் பேருடைய செல்போனுக்கு வர தொடங்கியது.
குரல் பதிவில் முதலமைச்சர் ஜெயலலிதா, ‘‘நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு வழங்கி உள்ள எனது அன்பார்ந்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய ஒரு மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
குரல்பதிவு குறுஞ்செய்தி, மட்டுமின்றி, ‘வாட்ஸ் அப்’ மூலமும் இதுபோன்ற நன்றி அறிவிப்பு, அ.தி.மு.க. வின் பல லட்சம் தொண்டர்களையும் சென்று சேர்ந்துள்ளது. இதைக் கேட்டவர்கள் முதல்வரே தங்களுக்கு நேரடியாக நன்றி தெரிவித்துள்ளதாக குதூகலித்தனர்.

ad

ad