புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2014


மும்பையை வீழ்த்திய சென்னை  வெள்ளியன்று பஞ்சாபை வெல்லுமா 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது இறுதிப்போட்டியை நிர்ணயிக்கும் ‘எலிமினேட்டர்’ சுற்று நடைபெற்று வருகிறது.
இதில் 3–வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்சும், 4-வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்சும் மோதிக்கொண்டன. 

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியில் சிம்மன்சும், ஹசியும் களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்தனர். ஹசி 39 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பத்தில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஆண்டர்சன் களம் இறங்கினார். 
 சென்   வெள்ளியன்று 
சிறப்பாக விளையாடி வந்த சிம்மன்ஸ் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் 44 பந்தில் 4 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடித்தார். அதன் பின் களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. 

174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தனது இன்னிங்சை துவக்கியது. இந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஸ்மித்தும் டு பிளசிஸ்சும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். மும்பை அணியின் பந்துவீச்சை ஸ்மித்தும் டு பிளெசிஸ்சும் பவுண்டரிகளை விளாசி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 

7வது ஓவரின் போது அணியின் ஸ்கோர் 60 ஆக இருந்தபோது 24 ரன்களை குவித்த ஸ்மித் அவுட்டானார். அவர் நடையை கட்டிய சில நிமிடங்களிலேயே டு பிளெசிஸ்சும் 35 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் ரெய்னாவும் மெக்கல்லமும் ஜோடி சேர்ந்து வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நன்றாக விளையாடுவார் என எதிர்பார்தத மெக்கல்லம் 14 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார். 

இதன் பின் ரெய்னாவும், ஹசியும் ஜோடி சேர்ந்து விளையாடினர். ஓஜா வீசிய 16வது ஓவரில் ரெய்னா ஒரு சிக்சரும், ஹசி இரண்டு சிக்சரும் அடித்து கலக்கினர். இதனால் 30 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார் ரெய்னா. ஹசியும் தன் பங்குக்கு 29 பந்துகளில் 40 ரன்களை அடித்து அசத்தினார். 

இதனால் 19வது ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்து சென்னை அணி மும்பை அணியை எலிமினேட்டர் சுற்றில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இனி வரும் வெள்ளியன்று சென்னை அணி பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் கொல்கத்தாவை சந்திக்கும்.

ad

ad