புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2014


விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் தீவிர தேடுதல்.இலங்கைக்கு துணை போகிறதா மலேசியா ?
மலேசியாவில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பக்கிட் அமான் விசேட பயங்கரவாத தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்போது இதுவரைக்கும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மலேசியாவை தளமாக பயன்படுத்துவதற்கு இடம்தரப்படமாட்டாது என்ற மலேசிய பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மலேசியாவை குற்றச்செயல் நடவடிக்கைகளுக்காக எவரும் பயன்படுத்த முடியாது. மலேசியாவில் தற்போது 4300 இலங்கையர்கள் தங்கியுள்ளனர்.
இதேவேளை 2009 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தளபதி என்று நம்பப்படுவதாக மலேசியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மலேசியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் அனுதாபிகளே விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதாகவும் அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ad

ad