புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2014


சோனியாவின் கல்வித் தகுதி என்ன? : மத்திய மந்திரி பாய்ச்சல்

 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிரிதி இராணி மத்திய
அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அவருக்கு கல்வி மற்றும் மனித வள மேம்பாடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜய் மக்கான், கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இராணி பட்டதாரி கிடையாது என்பது தேர்தலின் போது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். 
இதற்கு பா.ஜ.க உடனடியாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.  மக்கானின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரான உமர் அப்துல்லாவும் கண்டனம் தெரிவித்திருந்தார். கல்வி அமைச்சராக உள்ளவர் கற்றிருக்கவேண்டும் என்றால், விமான போக்குவரத்து துறையை கவனிப்பவர் விமானியாக இருக்கவேண்டும் என மக்கான் கூறுவாரா? என கேள்வியெழுப்பிய அவர், இது முற்றிலும் முட்டாள்தனமான கருத்து என டுவீட் செய்துள்ளார். 
 மக்கானுக்கு டுவிட்டர் மூலமாக மேலும் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், மத்திய ஜவுளித் துறை மற்றும் நீர்வளத்துறை மந்திரி சந்தோஷ் கங்வார், இன்று மக்கானின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து கூறிய அவர், ’உங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் கல்வித் தகுதி என்ன? என்று காங்கிரசாரை நான் கேட்க விரும்புகிறேன்’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ad

ad