புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மே, 2014

 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். 1,700 க்கும் அதிகமான கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கிய அவர், 2 ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் பெறும் நோக்கத்துடன் தாம் செயல்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் கருதி தாம் எடுத்த இந்த முடிவால்தான் நாட்டில் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் பயன்பாடு அதிகரித்ததாகவும் சாதாரண மக்கள் கூட செல்போன்களை பயன்படுத்தும் நிலை

உருவானதாகவும் தமது வாக்குமூலத்தில் ஆ. ராசா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உச்சநீதிமன்றத்தில் தமது கருத்துக்களை விரிவாக முன்வைக்க தமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனியிடம் ஆ. ராசா தெரிவித்தார்.

அப்போது நீதிபதி சைனி, வழக்குக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை விவாதிக்க வேண்டாம் என்றும் சிபிஜ சிறப்பு நீதிமன்றத்தில் அவரது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி.கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 17 பேரும் இன்று நேரில் ஆஜராகி, எழுத்துப்பூர்வமாக வாக்குமூலங்களை அளித்தனர்.

முதலாவதாக, இன்று ஆ.ராசாவின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், சிபிஐ தரப்பு சாட்சிகளான தயாளு அம்மாள் உட்பட மொத்தம் 153 பேரின் சாட்சியங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன.

இந்நிலையில் தற்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் முன்னதாக 1,718 கேள்விகள் அடங்கிய 824 பக்கங்களை கொண்ட வரைவு கேள்வித்தாள் குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டது.

ad

ad