புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2014


மோடி பதவியேற்பு: ஜெயலலிதா, வைகோ புறக்கணிப்பு;தேமுதிக - பாமக பங்கேற்பு!

 நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதே சமயம் விஜயகாந்த் மற்றும் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் தவிர திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் ஜெயலலிதா: பிரதிநிதியையும் அனுப்பவில்லை இதற்கிடையே மோடியின் பதவியேற்பு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.

ராஜபக்சே வருவதால் மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் ராஜபக்சே வருவதையடுத்து மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் அவர் பதவியேற்பு விழாவுக்கு தனது சார்பில் பிரதிநிதி யாரையும் அனுப்பி வைக்கப் போவது இல்லை என்று கூறப்படுகிறது.

சென்னை இதனிடையே மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்த வரை தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்தியஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி தலைவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

பா.ஜனதா தலைவர்களின் அழைப்பை ஏற்று கூட்டணி கட்சித் தலைவர்கள் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கிறார்கள். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இன்று இரவு அல்லது நாளை காலை மூவரும் டெல்லி செல்கிறார்கள்.

பா.ம.க. சார்பில் கட்சித் தலைவர் ஜி.கே.மணியும், அன்புமணி ராமதாசும் பங்கேற்கிறார்கள். ஜி.கே.மணி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். டாக்டர் அன்புமணி ஏற்கனவே சென்று விட்டார். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. போராட்டம் அறிவித்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை காலை வைகோ தலைமையில் கருப்பு கொடி போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. பதவியேற்பு விழாவில் பங்கேற்காது என்பது உறுதியாகி விட்டது.

இதுதவிர பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். மேலும் பலர் இன்று மாலை புறப்பட்டு செல்கிறார்கள்.

ad

ad