புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்
தங்களுக்குள் 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த போட்டியின் 42-வது லீக் ஆட்டம் ராஞ்சியில் நேற்று மாலை நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
டேவிட் ஹஸ்ஸி சேர்ப்பு
சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. காயம் அடைந்த வெய்ன் பிராவோவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட டேவிட் ஹஸ்லி, டுபிளிஸ்சிஸ்க்கு பதிலாக களம் இறங்கினார். விஜய் சங்கருக்கு பதிலாக மிதுன் மன்ஹாஸ் அணியில் சேர்க்கப்பட்டார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விஜய் ஜோலுக்கு பதிலாக வருண் ஆரோன் இடம் பெற்றார்.
‘டாஸ்’ ஜெயித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக வெய்ன் சுமித், பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் களம் இறங்கினார்கள். சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது.
பிரன்டன் மெக்கல்லம் 19 ரன்
5-வது ஓவரில் வருண் ஆரோன் பந்து வீச்சில் பிரன்டன் மெக்கல்லம் 19 ரன்னிலும் (13 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன்), வெய்ன் சுமித் 9 ரன்னிலும் (15 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அப்போது அணியின் ஸ்கோர் 29 ரன்னாக இருந்தது.
இதைத்தொடர்ந்து டேவிட் ஹஸ்ஸி, சுரேஷ்ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். டேவிட் ஹஸ்ஸி தொடக்கத்தில் தடுமாறினார். சுரேஷ்ரெய்னா அதிரடி காட்டினார். 14 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100 ரன்னை கடந்தது. அணியின் ஸ்கோர் 104 ரன்னாக உயர்ந்த போது டேவிட் ஹஸ்ஸி 25 ரன் எடுத்த நிலையில் (29 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முரளிதரன் பந்து வீச்சில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்தது.
சுரேஷ்ரெய்னா அரை சதம்
நிலைத்து நின்று ஆடிய சுரேஷ்ரெய்னா 35 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரை சதத்தை எட்டினார். இந்த சீசனில் சுரேஷ்ரெய்னா அடித்த 2-வது அரை சதம் இதுவாகும். ஐ.பி.எல். போட்டியில் அவர் அடித்த 20-வது அரை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அணியின் ஸ்கோரை அதிரடியின் மூலம் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி 7 ரன்னில் (6 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.
சென்னை அணி 138 ரன்கள்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. சுரேஷ்ரெய்னா 48 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 62 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 9 பந்துகளில் 10 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பெங்களூர் அணி தரப்பில் வருண் ஆரோன் 2 விக்கெட்டும், முரளிதரன், அபுநெஷிம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெய்ல், பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் களம் இறங்கினார்கள். பார்த்தீவ் பட்டேல் 10 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் நடையை கட்டினார். அடுத்து வந்த விராட்கோலி 27 ரன்னில் ஆட்டம் இழந்தார். வழக்கமாக அதிரடி காட்டும் கெய்ல் இந்த ஆட்டத்தில் நிதானமாக ஆடினார்.
கெய்ல் 46 ரன்கள்
நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்த கெய்ல் 50 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 46 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். அவருடன் இணைந்த டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 28 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
இதனை அடுத்து யுவராஜ்சிங்குடன், சச்சின் ராணா ஜோடி சேர்ந்தார். கடைசி 2 ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 19-வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே வந்தது. கடைசி ஓவரில் பெங்களூர் அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. டேவிஸ் ஹஸ்ஸி வீசிய அந்த ஓவரில் யுவராஜ்சிங் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி நெருக்கடியை குறைத்தார். அடுத்த பந்தில் 2 ரன் எடுத்த அவர் 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 4-வது பந்தை எதிர்கொண்ட சச்சின் ராணா (1 ரன்) பிரன்டன் மெக்கல்லத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பெங்களூர் அணி வெற்றி
அடுத்து களம் கண்ட அபு நெஷிம் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுவராஜ்சிங் 9 பந்துகளில் ஒரு சிக்சருடன் 13 ரன்னும், அபு நெஷிம் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் அஸ்வின், டேவிட் ஹஸ்ஸி தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பெங்களூர் வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். டேவிட் ஹஸ்ஸி பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியது சென்னை அணிக்கு இழப்பை ஏற்படுத்தியது.
11-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூர் அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. 11-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு கிடைத்த 3-வது தோல்வி இது. சென்னை அணி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்திவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
வெய்ன்சுமித்(சி)டிவில்லியர்ஸ்
(பி) வருண் ஆரோன் 9
பிரன்டன் மெக்கல்லம் (சி)
ஸ்டார்க்(பி)வருண் ஆரோன் 19
சுரேஷ்ரெய்னா(நாட்-அவுட்) 62
டேவிட் ஹஸ்ஸி (சி)
ஸ்டார்க் (பி) முரளிதரன் 25
டோனி (சி) கெய்ல்
(பி) அபுநெஷிம் 7
ரவீந்திரஜடேஜா(நாட்-அவுட்) 10
எக்ஸ்டிரா 6
மொத்தம் (20 ஓவர்களில்
4 விக்கெட்டுக்கு) 138
விக்கெட் வீழ்ச்சி: 1-29, 2-29, 3-104, 4-115.
பந்து வீச்சு விவரம்:
முரளிதரன் 4-0-29-1
ஸ்டார்க் 4-0-23-0
வருண்ஆரோன் 3-0-29-2
அபுநெஷிம் 4-0-18-1
யுஸ்வேந்த்ரா சாஹல் 4-0-27-0
சச்சின் ராணா 1-0-9-0
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
கெய்ல் (பி) அஸ்வின் 46
பார்த்தீவ் பட்டேல் (சி) சுரேஷ்
ரெய்னா (பி) அஸ்வின் 10
விராட்கோலி(ஸ்டம்பிங்)டோனி
(பி) ரவீந்திர ஜடேஜா 27
டிவில்லியர்ஸ்(சி)ரவீந்திர ஜடேஜா
(பி) டேவிட் ஹஸ்ஸி 28
யுவராஜ்சிங் (நாட்-அவுட்) 13
சச்சின் ராணா (சி) பிரன்டன்
மெக்கல்லம்(பி)டேவிட்ஹஸ்ஸி 1
அபுநெஷிம் (நாட்-அவுட்) 4
எக்ஸ்டிரா 13
மொத்தம் (19.5 ஓவர்களில்
5 விக்கெட்டுக்கு) 142
விக்கெட் வீழ்ச்சி: 1-14, 2-75, 3-110, 4-125, 5-138.
பந்து வீச்சு விவரம்:
மொகித் ஷர்மா 2-0-13-0
அஸ்வின் 4-1-16-2
பத்ரீ 3-0-15-0
சுரேஷ்ரெய்னா 4-0-20-0
ரவீந்திர ஜடேஜா 4-0-31-1
டேவிட் ஹஸ்ஸி 2.5-0-38-2

ad

ad