புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மே, 2014


மோடி மட்டும் ஏன் பேரணி நடத்தக்கூடாது? தேர்தல் கமிஷன் மீது அருண் ஜெட்லி குற்றச்சாட்டு!

பா.ஜ.க., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வாரணாசியில் பேரணி நடத்த மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் பேரணி நடத்தியுள்ளனர். கெஜ்ரிவால், ராகுல் ஆகியோரும் பேரணி நடத்தினர். ஜெயலலிதா, மம்தா ஆகியோருக்கு பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் அவர்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். 


தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறது. மேற்குவங்கம் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் ஓட்டுச்சாவடிகள் அமைதியாக கைப்பற்றப்படுகின்றன. இது பற்றி தெரிந்திருந்தும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகப்படியான கட்டுப்பாடுகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை தடுத்து விடும். 
வாரணாசியில் மோடி பேரணிக்கு முதலில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தேர்தல் அதிகாரி மறுத்தார். தேர்தல் அதிகாரி குறித்து நான் தெரிவித்த கருத்தில் உறுதியாக உள்ளேன். வாரணாசியில் பா.ஜ.க., பேரணி நடத்தியது சரியானதே. உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் போன்றோர் பேரணி நடத்தியுள்ளனர். மோடி மட்டும் ஏன் பேரணி நடத்தக்கூடாது. மோடி எந்தவித தேர்தல் விதிமுறைகளையும் மீறவில்லை. இவ்வாறு அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

ad

ad