புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2014


டிரைவர் குதித்து தப்பித்ததால் பஸ்–லாரி பயங்கர விபத்து.அரியலூர் அருகே 13 பேர் பலி

அரியலூரில் இருந்து செந்துறை நோக்கி அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சேட் (வயது 30) ஓட்டி சென்றார். பஸ்சில் சுமார் 40–க்கும் மேற்பட்ட
பயணிகள் இருந்தனர். ஓட்டக் கோவிலுக்கும், பொய்யாதநல்லூருக்கும் இடையே 3.30 மணி அளவில் பஸ் சென்ற போது எதிரே செந்துறையில் இருந்து அரியலூர் நோக்கி அதிவேகத்துடன் லாரி வந்தது.


இதனால் பயந்து போன பஸ் டிரைவர் சேட் பஸ்சில் இருந்து கீழே குதித்து தப்பினார். இதையடுத்து பஸ் கட்டுப்பாட்டை இழந்து லாரியுடன் டமார் என மோதியது. இந்த விபத்தில் பஸ்சில் வலது பகுதி முழுவதும் அப்பளம் போல நொறுங்கியது. பஸ்சில் வந்த பயணிகள் உயிர் பயத்தில் கூக்குரலிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த அரியலூர் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ், சிமெண்ட் ஆலை ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரும் அங்கு சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்களில் அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு அப்பகுதி மக்களும் உதவி செய்தனர்.
இந்த விபத்தில் பொய்யாதநல்லூரை சேர்ந்த பச்சையப்பன் மனைவி அலமேலு (45), உடையார் பாளையத்தை சேர்ந்த ராஜாக்கண்ணு மனைவி ஆனந்தி (30), நாகல்குழியை சேர்ந்த சுரேஷ் (25), சரவணன் மனைவி ஜெயந்தி (37), செதலவாடியை சேர்ந்த தனவேல் (65), ஆதிகுடிகாடை சேர்ந்த செல்லமுத்து, வீராக்கன் கிராமத்தை சேர்ந்த செங்குட்டுவன் மனைவி கவிதா (24) ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 34 பேர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் ஆர்.எஸ்.மாத்தூரை சேர்ந்த தங்கவேலு மனைவி ஜெயலட்சுமி (25), பிரபாதர்ஷினி (6) ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

இதை தொடர்ந்து காயமடைந்த 32 பேரும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்பட்டது.இந்த விபத்து குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

ad

ad