புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014


தமிழ் மக்கள் விடயத்தில் நியாயமாக நடக்காவிடில் அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்வேன்: டக்ளஸ்
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளத் தவறினால் தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவர் மீண்டுமொருமுறை பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எனக்கு எமது மக்களின் உரிமைகளே பிரதானம். எமது மக்களின் நிரந்தர மகிழ்ச்சியே எனதும் நீடித்த மகிழ்ச்சி ஆகும்.
அரசியலுரிமை, அபிவிருத்தி மற்றும் எமது மக்களின் வாழவ்வாதார உரிமைகளை மத்திய அரசில் இருந்து எமது மக்களுக்கு பகிர்ந்தளிக்கவே நான் அரசில் அங்கம் வகித்து வருகின்றேன்.
பலரது தூற்றுதல்களுக்கு மத்தியிலும் நான் தொடர்ந்தும் அரசில் அமைச்சராக பங்கெடுத்து வருவது எமது மக்களுக்காகவே. எனது சாணக்கிய தந்திர மதிநுட்ப வழிமுறை மூலம் எமது மக்களுக்காக பலதையும் நான் ஆற்றி வருகின்றேன். எமது வழிமுறை மூலம் அனைத்து உரிமைகளையும் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
உள்நாட்டில் அனைத்து தமிழ்க் கட்சி தலைமைகளும் இணைந்து யதார்த்த வழிமுறையில் நல்லெண்ண சமிக்ஞையை அரசுக்கு காட்டாத வரை சர்வதேச அழுத்தங்கள் எமது மக்களுக்கு ஒரு போதும் எந்தத் தீர்வையும் பெற்றுத்தராது.
யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எமது வழிமுறையை பின்பற்றி கலந்து கொள்ள முன்வந்திருப்பதும் தமிழ் பேசும் மக்களின் நலன் சார்ந்தது என்பது உண்மை என்றால், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாகவும் எமது மக்களுக்கான இறுதித் தீர்வை நோக்கிச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வர வேண்டும் என நான் மீண்டும் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.
எனத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளத் தவறினால் அரசில் தொடரந்தும் அங்கம் வகிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad