புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2014

கூட்டமைப்புக்கு அடிப்பணிவதா?- குணதாச அமரசேகர 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடிப்பணிந்த ஒருவரை வடக்கு ஆளுநராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர்
குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

அதிகார பரவலாக்கம் மற்றும் அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்றுவது ஆகியன முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது. இதன் முதல் கட்டமாக வடக்கு மாகாண ஆளுநர் பதவியில் இருந்து சந்திரசிறி நீக்கப்பட உள்ளார்.

கூட்டமைப்புக்கு அடிப்பணிந்த ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்குலக நாடுகளின் போர்க்குற்றச்சாட்டுக்களே இந்த நடவடிக்கைக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் நவநீதம்பிள்ளை போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்த சர்வதேச ஆணைக்குழுவை நியமிக்க உள்ளார்.

அரசாங்கம் அதற்கு இடமளிக்க போகிறதா?. அரசாங்கம் அதற்கு இடமளிக்க வேண்டும் என இந்தியா கூறியுள்ளது. அந்த விசாரணைகளுக்கு இடமளிக்க கூடாது. ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் இன்றி அவர்களால் எதனையும் செய்ய முடியாது.

பொருளாதார தடைவிதித்தால் மேற்கொள்ள போகும் நடவடிக்கைகள் என்ன?. விக்னேஸ்வரனை ஆட வைக்கவே சந்திரசிறியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க தயாராகியுள்ளனர்.

வடக்கு மாகாண சபை 23 யோசனைகளை நிறைவேற்றியுள்ளது. அதில் ஒன்று ஆளுநரை நீக்க வேண்டும் என்பது.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியுள்ளனர். இதன் அர்த்தம் ஈழத்தை ஏற்படுத்துவது. இந்த நிலைமை பாரதூரமாக மாறும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ad

ad